இன்று இல்லாவிட்டால், நாளை நல்ல காலம் வரும். நாளை இல்லாவிட்டால், அதற்கு மறுநாள் நல்லதாக விடியும்!’ என நம்பிக்கையுடன் இருக்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள். ஆனால், அந்தக் கட்சியின் குடும்பப் புள்ளிகளை மையம்கொண்டு அடுத்தடுத்து சுழல்கிறதே சர்ச்சை றாவளிகள்.
2ஜி அலைக்கற்றையில் ஆரம்பித்த அதகளம், இப்போது ஓர் அயல்நாட்டு காரில் வந்து நிற்கிறது. மும்பையில் உள்ள நவசேவா துறைமுகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 'மஸராட்டி’ என்ற சொகுசு கார் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. அந்த காரை வாங்கிய அகமதாபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர், சென்னையில் ஒருவருக்கு அதை விற்பனை செய்தார். 2 கோடி மதிப்பு உடைய காரை மிக மிகக் குறைந்த மதிப்பாகக் காட்டி, வரி ஏய்ப்பு செய்ததாக புகார் கிளம்பியது. அதனால், அகமதாபாத் வருவாய் புலனாய்வுத் துறையினர், சென்னை வருவாய் புலனாய்வுத் துறையின் உதவியுடன் மஸராட்டி காரைத் தேடி வந்தனர். கடந்த 21-ம் தேதி மயிலாப்பூரை சேர்ந்த பஷீர் அகமது என்பவரிடம் இருந்து, அந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதற்குப் பின்னர்தான், விவகாரம் வேறு ரூட்டில் விஸ்வரூபம் எடுத்துப் பயணிக்கிறது. பறிமுதல் செய்யப்பட்ட சொகுசு காரின் நம்பர் ஜிழி06 ணி 0001. 'இதை மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் பயன்படுத்தினார். வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர் ஒருவர்தான் அவருக்கு இந்த காரை பரிசாகக் கொடுத்தார்!’ என்று முதலில் செய்தி கசிந்தது. ஏற்கெனவே காலாவதி மருந்து விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மீனாட்சி சுந்தரம் ஒரு பி.எம்.டபிள்யூ. காரை பரிசாகக் கொடுத்ததாக, இதே சபரீசன் மீது புகார் கிளம்பியது நினைவு இருக்கலாம்.
நாம் சென்னை தி.நகரில் இருக்கும் மத்திய வருவாய் புலனாய்வு அலுவலகத்துக்கு சென்றபோது, அந்த காரின் நம்பர் பிளேட்டைக் கழற்றி எடுத்துவிட்டார்கள். யாரும் அதை படம் எடுக்க முடியாதபடி காரை கவர் போட்டு மூடி இருந்தார்கள். இந்த கார் விவகாரம், முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்குக் கொண்டுசெல்லப்பட, 'கருணாநிதி குடும்பத்தில் யார் யார், என்னென்ன கார்களை பயன்படுத்துகிறார்கள், அவற்றின்நம்பர்கள் என்ன என எல்லா விவரங்களும் எனக்கு உடனடியாகக் கொடுங்கள்!’ என உளவுத் துறையிடம் கேட்டு இருக்கிறார். கருணாநிதி குடும்பத்தினரிடம் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு சொகுசு கார்கள் இருக்கின்றனவாம். மு.க.ஸ்டாலினின் மகன் உதயநிதி 'ஹம்மர்’ சொகுசு காரை பயன்படுத்துகிறார். கருணாநிதியின் பயணத்துக்கு என்று 'லம்போகினி,’ 'ஆஸ்டன் மார்டின்,’ 'மாடிஃபைடு பென்ஸ்’ ஆகிய மூன்று கார்கள் உள்ளன. கருணாநிதி பெரும்பாலும் பென்ஸில்தான் பயணிக்கிறார். இந்த காரில், ஏ.சி. காற்று கீழ்ப்புறத்தில் இருந்து வருவது ஸ்பெஷல். 'கருணாநிதியின் சொந்தபந்தங்கள் பயன்படுத்தும் அனைத்து சொகுசு கார்களுக்கும் முறையாக வரி கட்டப்பட்டு உள்ளதா?’ என்று அதிகாரிகள் இப்போது தீவிர விசாரணையில் குதித்து இருக்கிறார்கள்.
இதனிடையே தற்போது பறிமுதல் செய்யப்பட்ட கார் சபரீசன் பயன்படுத்தியது அல்ல. உதயநிதி ஸ்டாலின்தான் பயன்படுத்தினார். அதற்கான வீடியோ ஆதாரம் ஒரு தனியார் தொலைக்காட்சி வசம் உள்ளது என்றும் இன்னொரு பரபரப்பு கிளம்பி இருக்கிறது.
முன்னணி கார் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரிடம் பேசியபோது, ''இந்தியா முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்ட சொகுசு கார்கள் முறையாக வரி கட்டாமல் இறக்குமதி செய்யப்பட்டு உள்ளன. அதைப் பறிமுதல் செய்ய வேண்டும் என்று அகமதாபாத்தைச் சேர்ந்த கார் டீலர் ஒருவர் அங்கு உள்ள உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அதன் தொடர்ச்சியாகவே, தேடுதல் வேட்டை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடந்த 2005-ம் ஆண்டு பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பயன்படுத்திய ஹம்மர் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதே ஆண்டில் ஜோதிபாசுவின் மகன் சந்தன்பாசுவின் உயர் ரக காரும் சிக்கியது. 2006-ல் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சௌதாலாவின் மகன் அஜய் சௌதாலா பயன்படுத்திய 'டொயோட்டா லேண்ட் க்ரூஸர் பிரேடோ’ கார் வரி ஏய்ப்பு காரணமாக பறிமுதல் செய்யப்பட்டது. சஞ்சய் பண்டாரி என்ற கார் கடத்தல் மன்னன் அப்போது கைது செய்யப்பட்டான். இந்தியா முழுவதும் கடந்த ஐந்து ஆண்டுகளில் 100-க்கும் அதிகமான கார்கள் சிக்கி இருக்கின்றன. வெளிநாட்டுப் பயணிகளுக்காக இந்த காரை டிராவல்ஸ் நடத்துபவர்கள் இறக்குமதி செய்தால், வரி விலக்கு உண்டு. இதைப் பயன்படுத்தி காரை இறக்குமதி செய்யும் கும்பல், பிறகு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்களுக்குப் பெரும் தொகைக்கு விற்றுவிடுகிறது. அரசாங்கம் கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்தினால் இது போன்ற வரி இழப்பைத் தடுக்க முடியும்!'' என்றார்.
மத்திய வருவாய் புலனாய்வு கூடுதல் இயக்குநர் (சென்னை) ராஜனிடம் பேசினோம். ''சென்னையில் நாங்கள் பறிமுதல் செய்த சொகுசு கார் பஷீர் அகமது என்பவருக்குச் சொந்தமானது. அவரது மயிலாப்பூர் வீட்டில்தான் அதைப் பறிமுதல் செய்தோம். இதற்கு முன்பு அந்த காரை அரசியல் பிரபலங்கள் யாரும் பயன்படுத்தினார்களா என்பது குறித்து எனக்குத் தெரியாது. எங்களின் இந்த அதிரடி நடவடிக்கை தொடரும்...'' என்றார்.
இது குறித்து, சபரீசனைப் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்தும், பதில் பெற இயலவில்லை! அவர் விளக்கம் வந்தால் வெளியிடத் தயாராக உள்ளோம்.
- தி.கோபிவிஜய்

No comments:
Post a Comment