Thursday, June 30, 2011

''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்!''

6 வயதினிலே’... இன்றும் இதுதான் பாரதிராஜா மனசின் வயசு! காதல் பேசினால்... மகிழ்கிறார். நட்பு என்றால்... நெகிழ்கிறார். கோபம் வந்தால்... கொந்தளிக் கிறார்.  
 ''இயக்குநர்கள் சங்கத் தேர்தலிலும் அரசியல் புகுந்திருச்சே?''
''நான் பெத்த புள்ளை மனோஜ் என்னை 'அப்பா’ன்னு கூப்பிடும்போது சந்தோஷமா இருக்கும்யா. ஆனா, அதைவிட நான் பெறாத பிள்ளைகளான இயக்குநர்கள் என்னைச் சுத்தி, 'அப்பா... அப்பா’னு உருகினப்ப, நான் கரைஞ்சுபோய்ட்டேன். 'அது எதுவும் நிஜம் கிடையாது. வெறும் நடிப்பு’னு தெரிஞ்சப்ப, நொறுங்கிப்போயிட்டேன். என்னை எதிர்த்து பாலசந்தர் நின்னா, பதற மாட்டேன். விசு நின்னா, வேதனைப்பட மாட்டேன். ஆனா, அமீரை நிக்கவைக்க அண்டர் கிரவுண்ட் வேலை பார்த்தாங்களே... அவனும் 'பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவேன்’னு பேட்டி தர்றான். இது என்ன போர்க்களமா? ஆளுக்கு ஒரு வாள் வெச்சு சண்டையா போட வந்தோம்? இது கலை உலகம்டா! ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை வெல்லத்தான் முடியும். வீழ்த்த முடியாது. 'எப்படி அப்படி சொன்னே?’னு அமீர்கிட்ட கேட்டேன். 'நான் சொல்லவே இல்லை’ னுட்டான். இப்போ நான் ஜெயிச்சுட்டேன். பதவியேற்பு விழா அன்னிக்கு எல்லா மீடியாக்களையும் கூப்பிடுவேன். என் மன பாரத்தை அப்போ இறக்கிவைப்பேன். நேத்துக்கூட என்னைத் தேடி, சேரனும் அமீரும் வந்தாங்க. என்னால அவங்ககிட்ட சிரிக்க முடியலை. ஏன்னா, கோபத்தை மனசுல மறைச்சுட்டு, சிரிச்சு நடிக்க எனக்குத் தெரியாது. கடந்த 35 வருஷமா நான் பார்க்காத துயரத்தை இப்போ பார்க்குறேன்!'' 
''கனவுப் படம் எடுக்கும் முயற்சி என்ன ஆச்சு?''
'' '16 வயதினிலே’, 'முதல் மரியாதை’யில் பாரதிராஜாவைப் பார்த்த தமிழ் ரசிகன் திரும்ப என்னை அண்ணாந்து பார்ப்பான். படத் தோட டைட்டில்... 'அன்னக் கொடியும் கொடி வீரனும்’. பெரிய நடிகர், நடிகை பட்டாளமே நடிக்கப்போகுது. 'மைனா’, 'களவாணி’னு புதுசா வந்திருக்கிற எல்லா திறமையான இளம் இயக்குநர்களுக்கும் சவால் விடுறான் இந்த பாரதிராஜா. நீங்க இதுவரைக்கும் யோசிக்காத, பார்த்திராத ஒரு படமா இருக்கும். இது எனது கனவுப் படம் மட்டும் இல்லை... 70 வருடத் தமிழ் மண்ணின் வரலாற்றுப் பதிவு!''
''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்துவை மறுபடி பார்க்கவே முடியாதா?''
''கலைஞர்களுக்குள் ஈகோ வர்றது இயல்பான விஷயம்தான். அப்படித்தான் சின்ன ஈகோ ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் வந்துச்சு. அந்த மனஸ்தாபத்துக்கு மீடியா மருந்து போட்டு இருக்கணும். நீங்க சமரசம் செஞ்சிருக்கணும். சமாதானப்படுத்தி இருக்கணும். அதுதானே தார்மீகத் தர்மம். நட்பில் கிழிசல் வந்தா, அதை நூல் வெச்சுத் தைப்பதுதானே நூல்களின் கடமை. அதைத் தவிர்த்து, விரிசலைப் பெரிதாக்கி வேடிக்கை பார்த்தது மீடியா. இப்போ என்ன ஆச்சு? இரண்டு உன்னதமான கலைஞர்கள் இன்று வரை கீரியும் பாம்புமா சீறிக்கிட்டே இருக்காங்க!''
''அரசியலுக்கு எப்போ வருவீங்க?''
''நான் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதானு மூணு பேர்கிட்டயும் பழகியவன். மூணு பேருமே வெவ்வேறு வகையில் தகுதிகொண்டவங்க. ஒவ்வொருத் தர் திறமையைப் பார்த்தும் மெய் சிலிர்த் தவன் நான். இதுவரை எந்தக் கட்சி சாயத்தையும் என் மீது பூசிக்கலை. தெலுங்கனுக்கு, கன்னடனுக்கு இருக்கிற இன உணர்ச்சி... தமிழனுக்கு எப்போ வருமோ, அப்போ நான் அரசியலில் இருப்பேன்!''
''ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழர்களோட போராட்டம் இப்போ எப்படி இருக்கு?''
''இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக வேதனைப்படுற மாதிரி நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க. இன்னிக்கு தமிழ்நாட்டில் அது பெரிய பிசினஸ் ஆகிருச்சு.
எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உள்ளப் பூர்வமா, உணர்வுரீதியாப் போராடுறது நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான்னு நாலு பேர் மட்டும்தான். இந்த உண்மை எனக்கு மட்டும் அல்ல... உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அத்தனை பேருக்குமே தெரியும்!''

No comments:

Post a Comment