Thursday, June 30, 2011

திருமணத்தை ஏன் வெளியில் சொல்லணும்?'

'' 'அரவான்’ - அதிகம் உழைப்பைக் கொடுத்து நடித்த படம். உடல்மொழி, உரையாடல், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை என்று ஒவ்வொரு காட்சியும் ஒவ்வோர் அனுபவம். வெளி நாட்டுப் படங்களோ, மற்ற முன்மாதிரி களோ எதுவுமே இல்லை. எல்லாமே யோசிச்சு யோசிச்சுச் செய்யணும். வசந்தபாலனின் உழைப்புதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். காடுகள், மலைகள், பாறைகள்னு எங்கெங்கோ எங்களை அழைத்துப் போய்க்கொண்டே இருக்கார்!  வசந்தபாலனோட உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் ஓர் உதாரணம் சொல்றேன். ஒரு சந்தையில் கூழ் குடிக்கிற காட்சி. 'தொட்டுக்க கருவாடு இருந்தால் நல்லா இருக்குமே’னு அவரிடம் கேட்டேன். 'அது பஞ்ச காலம். நீர்நிலைகள் வத்திப்போயிருக்கும். அந்தக் காலத்தில் அணைகளும் கிடையாது. அதனால், மீனுக்கு வழி இல்லை’னு உடனே சொன்னார். ஆச்சர்யமான மனிதர்!'' - வியப்பு தெரிகிறது பசுபதியின் பேச்சில். அவரின் இயல்பான நடிப்புக்கு இங்கே போட்டி அதிகம் இல்லை என்பது தெரிந்ததுதான். பறவைகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் பசுபதி யிடம் பேசியபோது...
 ''அடுத்து விக்ரமோட 'கரிகாலன்’. தொடர்ச்சியா வரலாற்றுப் படங்களில் நடிக்கிறீங்களே?''
''என்னவோ தெரியலை... அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்குது. சோழர் காலத் தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதியை எடுத்து, அருமையா செய்திருக்காங்க. தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் நடந் துட்டே இருக்கு. புதிய புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்னு புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்குத் தோணுது. பீரியட் படம் எடுப்பதற்கு வசதியா, இப்போ தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு. நடிப்பு மேல் தீவிரமான ஈடுபாடுகொண்ட எங்களை மாதிரியானவர்களுக்கு இது பொற்காலம்!''
''ஏன், நடிப்பில் இவ்வளவு இடைவெளி?''
''நானே தேர்ந்தெடுத்ததுதான் இந்த இடைவெளி. இரண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு, சும்மா இருக்காமல் அடுத்தடுத்து படம் நடிச்சுட்டே இருக் கணும். இல்லைன்னா, பிடிச்சதை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணணும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குப் பிடிக்கலைன்னா, நடிக்க மாட்டேன். நடிகன்னா, தினமும் நடிச்சுக்கிட்டு இருக்கிறதுன்னு அர்த்தம் இல்லை. இப்பக்கூட 'வைரம்’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். சிறந்த நடிகர்னு கிரிட்டிக் அவார்டு கிடைச்சது. எதுவும் பிடிச்சாதான் செய்றதுன்னு வழக்கம்ஆயிடுச்சு.
இப்பக்கூடப் பாருங்க, சிட்டியில் பறவைகள் சத்தமே கேட்க முடியலைனு கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கம் வந்துட்டேன். தினமும் காலையில் குயில்கள்தான் என்னை எழுப்புது. நல்ல படம்னா நடிப்போம்ணே!''
''ஹீரோவாவே நடிக்கணும்னு இருந்துட்டீங்களா?''
'' ஹீரோவா மட்டுமே நான் நடிப்பேன்னு சொன்னதே இல்லை. ஒரு அட்டகாசமான வில்லனா நடிக்கணும்னா, அதற்குரிய களம் கிடைக்கணும். இப்ப 'ஆரண்ய காண்டம்’ பார்த்தேன். ஜாக்கி ஷெராப் செய்திருந்த ரோலைச் செய்ய ரொம்ப ஆசையா இருந்தது. நன்கு வடிவமைக்கப்பட்ட கேரக்டர் ஜாக்கியுடையது!''
''ஏன், இதுவரை நீங்கள் திருமணமே செய்துகொள்ளவில்லை?''
''யார் சொன்னது? இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. திருமணம் மிகவும் பெர்சனலான விஷயம். அதை வெளியில் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து. அவங்க பெயர் சூர்யா. ஆர்க்கிடெக்ட்!''
''நீங்க பெரிய அளவில் விவசாயம் பண்றதா சொல்றாங்களே?''
''சின்ன அளவுதாங்க. இயற்கை விவசாயம் பண்றேன். வேங்கை, வில்வம், வேம்பு, மகோகனி, மலைவேம்புனு ஏகப்பட்ட மரங்கள் வளர்க்கிறேன். இவ்வளவு நேர்த்திக்கும் 'பசுமை விகடன்’தான் எனக்கு உதவி.
ஆரோக்கியமான உணவு, காய்கறிகள், பெட்ரோல் வாசனைஇல்லாத காற்றுனு அற்புதமா இருக்கு வாழ்க்கை!''

மகனை இயக்கும் மாணவன்!

டந்த வாரம் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இனிதே நடந்து முடிந்தது விஜய் டி.வி-யின் விருது வழங்கும் விழா. அதன் சுவாரஸ்யத் துளிகள் இங்கே...
  விழாவின் முதல் நிகழ்ச்சியாக 'தமிழ் சினிமாவின் பெருமைக்குரிய தருணம்’ என்று தேசிய விருது பெற்ற 14 கலைஞர்களையும் மேடைஏற்றியது அழகு!
 ''நம் வேர்களை நோக்கிப் பயணப்பட்டு படங்கள் பண்ணினால், எல்லாப் படங்களும் தவறு செய்யாத தரமான படங்களாக அமையும்'' என்ற வெற்றிமாறன் கருத்துக்கு அமோக அப்ளாஸ்!
 சிறந்த ஸ்டன்ட் மாஸ்டருக்கான விருதை 'நான் மகான் அல்ல’ படத்தின் அனல் அரசுவுக்கு வழங்கிய தனுஷிடம், ''தேசிய விருது தகவல் கேட்டு எப்படி ஃபீல் பண்ணீங்க?'' என்றார் கோபிநாத். ' 'இவன் எல்லாம் எந்த தைரியத்துல நடிக்க வந்துட்டான்?’னு என் காதுபடவே சிலர் பேசி இருக்காங்க. நம்மளை எல்லாம் நடிகனா ஏத்துக்கிட்டதே பெரிய விஷயங்க. தமிழ்நாட்டு மக்களோட தாராள மனசைத்தான் பாராட்டணும்!'' என்று கலகலக்கவைத்தார். 
 'கள்ளிக்காட்டில் பிறந்த தாயே’ - வைரமுத்து, 'அவள் அப்படி ஒன்றும் அழகில்லை’ - நா.முத்துக்குமார், 'மன்னிப்பாயா’ - தாமரை, 'மைனா மைனா நெஞ்சுக்குள்ளே’ - யுகபாரதி, 'இதுவரை இல்லாத உணர்விது...’ - கங்கை அமரன் எனச் சிறந்த பாடலாசிரியருக்கான விருதுக்குத்தான் ஏகப்பட்ட போட்டி. அந்த விருதை அறிவிக்க வந்த பார்த்திபன், 'இது வாசிக்கப்படும் பெயரே அல்ல. உலகத் தமிழர்களால் நேசிக்கப்படும் பெயர். இவர் தன்னைப் பற்றி எழுத மாட்டாரா என காதல் ஒத்தக் காலில் நிற்கிறது’ என்று சஸ்பென்ஸ் வைக்க, 'வைரமுத்து... வைரமுத்து’ என்று அதிர்ந்தது ஆடிட்டோரியம். புன்சிரிப்போடு விருதைப் பெற்றுக்கொண்டார் கவிஞர்.
 ''தோழர்களே... கேட்பதற்கு, பாடுவதற்கு என்று இருந்த பாடல், இன்று ஆடுவதற்கு என்றாகிவிட்டது. இயக்குநர்களுக்கு ஒரு வேண்டு கோள். ஒரு படத்தில் ஓரிரு பாடல்களையாவது, இசை, மொழியைச் சிதைக்காதவையாகப் பார்த்துக்கொள்ளுங்கள்'' - இது வைரமுத்துவின் ஏற்புரை வேண்டுகோள்.
 'மன்னிப்பாயா’ பாடலுக்காகச் சிறந்த பெண் பாடகி விருது பெற வந்த ஸ்ரேயா கோஷலை அறிமுகப்படுத்திய தொகுப்பாளர் சிவகார்த்திகேயன், ''இளம் வயதிலேயே நாலு முறை தேசிய விருது பெற்றவர். தன்யவாத் ஜி (வணக்கம்)'' என்றார். உடனே கோபிநாத், ''டேய்... தனியா வா!ன்னு சொல்ற மாதிரி இருக்கு'' என்றதும் அதிர்ந்து சிரித்தார்கள் இருவரும். 
 'ஜில்லா விட்டு...’ பாடலுக்காகச் சிறந்த நடன இயக்குநர் விருது பெற்றார் டான்ஸ் மாஸ்டர் தினேஷ். '' 'டான்ஸ் ஆட டான்ஸ் தெரிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. லுங்கி கட்டியிருந்தால் போதும்!’ என மெய்ப்பித்த தினேஷ் மாஸ்டருக்கு நன்றி'' என்று ஈசன் டான்ஸை நினைவுபடுத்திக் கலகலக்கவைத்தார் சிவகார்த்திகேயன்.
 ''திருக்குறளில் அறத்துப் பால், பொருட்பால், காமத்துப் பால் என முப்பால் தெரியும். ஆனால், இப்போது வந்து ஆடப்போவது அமலா பால்'' என்ற சிவகார்த்திகேயன் கமென்ட்டைத் தொடர்ந்து, ''ஏ ஜிங்கி ஜிங்கி ஜிமிக்கி போட்டு...'' எனத் தொடங்கி மிக்சர் மசாலாவுக்கு செம குத்தாட்டம் போட்டுச் சென்றார் அமலா பால். 
 'சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர்’ விருது பெற வந்த தம்பி ராமையா, ''வெற்றியின் பார்வை என் மீது திரும்பாதா என ஏங்கிக் கிடந்த எனக்கு 40 வயதுக்கு மேல் ஒளி வெள்ளம் கிடைச்சிருக்கு. அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, பெரியம்மா, சித்தப்பா...'' எனக் கடகடவென 40, 50 உறவு முறைகளைச் சொல்லிவிட்டு, ''எல்லோரையும் லவ் பண்ணுங்க பாஸ்... லைஃப் நல்லா இருக்கும்'' என்று சரவெடி கொளுத்தினார். ''ஓ... சப்போர்ட்டிங் ஆக்டரும் பஞ்ச் டயலாக் பேசலாமோ?'' என்ற கோபிநாத்தின் கமென்ட்டுக்கு செம ரெஸ்பான்ஸ்.
 'கான்ட்ரிபியூஷன் டு தமிழ் சினிமா’ விருது வழங்கப்பட்டதும் ரொம்பவே சுவாரஸ்யம். சுந்தரம் மாஸ்டர் பற்றிய திரையிடப்பட்ட வீடியோ காட்சியில் கே.பி., கமல், அமலா எனப் பலரும் பேசினார்கள். விருதைப் பெற வந்த சுந்தரம் மாஸ்டர், ''எனக்குப் பேசத் தெரியாது. ஆடத்தான் தெரியும். ஆனால், இங்கு நான் பேசியே ஆகணும். கே.பி. சார் மீது எனக்கு வருத்தம் உண்டு. நானும் அவரும் 'நீர்க் குமிழி’ மூலம்தான் அறிமுகமானோம். இது அவர் தந்த வாய்ப்பு. எல்லா மேடைகளிலும் ரஜினி, கமல் என ஸ்டார்களைப் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர, என்னைப்பற்றிப் பேசியதே இல்லை'' என வருந்திப்பேச... ''என் கண்ணுக்கு எதிரே உள்ளவங்களைப் பற்றி பேசியிருப்பேன். கடவுளைப்பற்றி யாராவது தினமும் பேசுவாங்களாய்யா? நீயும் எனக்கு அப்படித் தான். ஹாட்ஸ் ஆஃப் யூயா'' என்று கே.பி. சொன்னதும்தான் சமாதானம் ஆனார். 
 சிறந்த பொழுதுபோக்குப் பட இயக்குநர் விருதை ஷங்கருக்குக் கொடுத்த எஸ்.ஏ.சி., ''என் மாணவன், இப்போது என் மகனை இயக்குகிறார் என்பது பெருமை'' என்று பூரித்தார்!
 சிறந்த வில்லன் விருதை ரஜினிக்காக தனுஷ் பெற்றுக்கொண்டார். அவர் போனில் சொன்ன வாழ்த்துச் செய்தியை மைக்கில் படித்தார். ''எனக்கு ராமனைவிட ராவணனைத்தான் பிடிக்கும். அர்ச்சுனனைவிட துரியோதனனைப் பிடிக்கும். ஹீரோவைவிட வில்லனை பிடிக்கும். அந்த வகையில், இந்த விருதும் எனக்குப் பிடிக்கும். என்னை வாழவைக்கும் தமிழ் நெஞ்சங்களுக்கு நன்றி. நான் இன்று உயிர் பிழைத்து இருப்பது உங்களின் பிரார்த்தனைகளால் மட்டுமே!'' என்று ரஜினியின் வாழ்த்தை தனுஷ் படித்து முடித்ததும்... அரங்கில் நெகிழ்ச்சி கலந்த நிசப்தம்!

''அமீரும் சேரனும் என்னை ஏமாற்றினார்கள்!''

6 வயதினிலே’... இன்றும் இதுதான் பாரதிராஜா மனசின் வயசு! காதல் பேசினால்... மகிழ்கிறார். நட்பு என்றால்... நெகிழ்கிறார். கோபம் வந்தால்... கொந்தளிக் கிறார்.  
 ''இயக்குநர்கள் சங்கத் தேர்தலிலும் அரசியல் புகுந்திருச்சே?''
''நான் பெத்த புள்ளை மனோஜ் என்னை 'அப்பா’ன்னு கூப்பிடும்போது சந்தோஷமா இருக்கும்யா. ஆனா, அதைவிட நான் பெறாத பிள்ளைகளான இயக்குநர்கள் என்னைச் சுத்தி, 'அப்பா... அப்பா’னு உருகினப்ப, நான் கரைஞ்சுபோய்ட்டேன். 'அது எதுவும் நிஜம் கிடையாது. வெறும் நடிப்பு’னு தெரிஞ்சப்ப, நொறுங்கிப்போயிட்டேன். என்னை எதிர்த்து பாலசந்தர் நின்னா, பதற மாட்டேன். விசு நின்னா, வேதனைப்பட மாட்டேன். ஆனா, அமீரை நிக்கவைக்க அண்டர் கிரவுண்ட் வேலை பார்த்தாங்களே... அவனும் 'பாரதிராஜாவை வீழ்த்திக் காட்டுவேன்’னு பேட்டி தர்றான். இது என்ன போர்க்களமா? ஆளுக்கு ஒரு வாள் வெச்சு சண்டையா போட வந்தோம்? இது கலை உலகம்டா! ஒரு கலைஞன் இன்னொரு கலைஞனை வெல்லத்தான் முடியும். வீழ்த்த முடியாது. 'எப்படி அப்படி சொன்னே?’னு அமீர்கிட்ட கேட்டேன். 'நான் சொல்லவே இல்லை’ னுட்டான். இப்போ நான் ஜெயிச்சுட்டேன். பதவியேற்பு விழா அன்னிக்கு எல்லா மீடியாக்களையும் கூப்பிடுவேன். என் மன பாரத்தை அப்போ இறக்கிவைப்பேன். நேத்துக்கூட என்னைத் தேடி, சேரனும் அமீரும் வந்தாங்க. என்னால அவங்ககிட்ட சிரிக்க முடியலை. ஏன்னா, கோபத்தை மனசுல மறைச்சுட்டு, சிரிச்சு நடிக்க எனக்குத் தெரியாது. கடந்த 35 வருஷமா நான் பார்க்காத துயரத்தை இப்போ பார்க்குறேன்!'' 
''கனவுப் படம் எடுக்கும் முயற்சி என்ன ஆச்சு?''
'' '16 வயதினிலே’, 'முதல் மரியாதை’யில் பாரதிராஜாவைப் பார்த்த தமிழ் ரசிகன் திரும்ப என்னை அண்ணாந்து பார்ப்பான். படத் தோட டைட்டில்... 'அன்னக் கொடியும் கொடி வீரனும்’. பெரிய நடிகர், நடிகை பட்டாளமே நடிக்கப்போகுது. 'மைனா’, 'களவாணி’னு புதுசா வந்திருக்கிற எல்லா திறமையான இளம் இயக்குநர்களுக்கும் சவால் விடுறான் இந்த பாரதிராஜா. நீங்க இதுவரைக்கும் யோசிக்காத, பார்த்திராத ஒரு படமா இருக்கும். இது எனது கனவுப் படம் மட்டும் இல்லை... 70 வருடத் தமிழ் மண்ணின் வரலாற்றுப் பதிவு!''
''பாரதிராஜா - இளையராஜா - வைரமுத்துவை மறுபடி பார்க்கவே முடியாதா?''
''கலைஞர்களுக்குள் ஈகோ வர்றது இயல்பான விஷயம்தான். அப்படித்தான் சின்ன ஈகோ ராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் வந்துச்சு. அந்த மனஸ்தாபத்துக்கு மீடியா மருந்து போட்டு இருக்கணும். நீங்க சமரசம் செஞ்சிருக்கணும். சமாதானப்படுத்தி இருக்கணும். அதுதானே தார்மீகத் தர்மம். நட்பில் கிழிசல் வந்தா, அதை நூல் வெச்சுத் தைப்பதுதானே நூல்களின் கடமை. அதைத் தவிர்த்து, விரிசலைப் பெரிதாக்கி வேடிக்கை பார்த்தது மீடியா. இப்போ என்ன ஆச்சு? இரண்டு உன்னதமான கலைஞர்கள் இன்று வரை கீரியும் பாம்புமா சீறிக்கிட்டே இருக்காங்க!''
''அரசியலுக்கு எப்போ வருவீங்க?''
''நான் எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதானு மூணு பேர்கிட்டயும் பழகியவன். மூணு பேருமே வெவ்வேறு வகையில் தகுதிகொண்டவங்க. ஒவ்வொருத் தர் திறமையைப் பார்த்தும் மெய் சிலிர்த் தவன் நான். இதுவரை எந்தக் கட்சி சாயத்தையும் என் மீது பூசிக்கலை. தெலுங்கனுக்கு, கன்னடனுக்கு இருக்கிற இன உணர்ச்சி... தமிழனுக்கு எப்போ வருமோ, அப்போ நான் அரசியலில் இருப்பேன்!''
''ஈழத் தமிழர் பிரச்னையில் தமிழர்களோட போராட்டம் இப்போ எப்படி இருக்கு?''
''இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக வேதனைப்படுற மாதிரி நீலிக்கண்ணீர் வடிக்கிறாங்க. இன்னிக்கு தமிழ்நாட்டில் அது பெரிய பிசினஸ் ஆகிருச்சு.
எனக்குத் தெரிஞ்சவரைக்கும் உள்ளப் பூர்வமா, உணர்வுரீதியாப் போராடுறது நெடுமாறன், வைகோ, தமிழருவி மணியன், சீமான்னு நாலு பேர் மட்டும்தான். இந்த உண்மை எனக்கு மட்டும் அல்ல... உலகம் முழுக்கப் பரவிக்கிடக்கும் தமிழர்கள் அத்தனை பேருக்குமே தெரியும்!''

ரஜினி எனக்கு குழந்தை மாதிரி!''

ன் கணவர் எனக்குப் பெரிய இன்ஸ்பிரேஷன்'' - எந்த மனைவியும் தன் அன்பான கணவரைப்பற்றிக் கூறக்கூடிய வார்த்தைகள்தான். ஆனால், லதாவுடன் வெகுநேரம் பேசியதில்... அவருடைய ஆழ் மனதில் ரஜினி பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கிறார் என்பதை உணர முடிந்தது.
''தன் குழந்தைப் பருவத்தைப்பற்றி - யாருக்குமே தெரியாத விஷயங்களைக்கூட - ரஜினி உங்களிடம் சொல்லி இருக்கக்கூடும்... அவற்றில் உங்கள் மனதைத் தொட்ட சில விஷயங்களைச் சொல்ல முடியுமா?''
''நிறையவே மனம்திறந்து சொல்லி இருக்கிறார். குடும்பத்தில் ரஜினிதான் கடைக்குட்டி. ஒரு அக்கா, அதற்குப் பிறகு இரு சகோதரர்கள். சிறு வயதில் குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் நிறைய இருந்ததாம். வெளியே துடிப்போடு ஓடி விளையாடினாலும், மனசுக்குள் அன்புக்காக நிறைய ஏங்கியவர் அவர். அப்பா போலீஸ் வேலையில் இருந்ததால் பிஸி. கண்டிப்பானவர் வேறு. ரஜினியின் சிறு வயதிலேயே அம்மாவும் இறந்துவிட்டதால்... பெரிய அண்ணாதான் பொறுப்போடு குடும்பத்தைக் கவனித்து வந்தார். வீட்டில் நிறைய அடி, உதை வாங்கி யிருக்கிறார். யாரையும் இதற்குக் குற்றம் சொல்ல முடியாது. வீட்டில் ஏதேதோ பிரச்னைகள் இருக்கும்போது இவர் வேறு எதற்காகவாவது அடம்பிடித்தால்... லூட்டி அடித்தால் என்ன செய்ய? அத்தனை கோபமும் இவர் மீதுதானே திரும்பும்!
பெங்களூரில் பள்ளிக் கூடத்தில் அவர் மீடியம் கன்னடம்... ரேங்க் ஹோல்டர்! 'நன்றாகப் படிக்கிறானே’ என்று, அவரிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல், திடீரென்று இங்கிலீஷ் மீடியத்துக்கு மாற்றினார்கள். ஒரு நிமிஷத்தில் எல்லாப் பாடங்களும் இங்கிலீஷ் ஆக மாறிவிட்டது. ரஜினி ரொம்ப அப்செட் ஆகிவிட்டார். திடீரென்று 'ரேங்க்’ குறைந்தது அவர் மனதைப் பாதித்தது... யாரிடமும் ஒன்றும் சொல்ல முடியாமல் மனசுக்குள் வருத்தத்தோடு தவித்திருக்கிறார்!''
''ஏன்? அவரிடம் பாசத்துடன் பழகியவர்கள் சுற்றுவட்டாரத்தில் யாருமேவா இல்லை? நண்பர்கள்... உறவினர்கள்?''
''அவருக்குப் பக்கத்து வீட்டில் ஒரு பிராமின் ஃபேமிலி இருந்தது. அவர்கள் இவர் மீது நிறைய அன்பு காட்டி இருக்கிறார்கள். மற்றபடி, அவர் சின்ன வயசுத் தாக்கங்களில் இருந்து மீண்டதற்கு முக்கியக் காரணம், கடவுள் நம்பிக்கை!
'நான் நல்லவனாக வளர வேண்டும், கடவுள் அருளால் ஏதாவது சாதிக்க வேண்டும்’ என்ற உணர்வு அவரிடம் மேலோங்கி நின்றிருக்கிறது. சின்ன வயதில் தினமும் நெற்றி பூரா விபூதி அடித்துக்கொள்வார் அவர்... அது அவருக்கு ரொம்பப் பிடிக்குமாம்!''
''கடவுள் நம்பிக்கைக்குப் பின்னணியிலும் ஏதேனும் காரணம்... உந்து சக்தி இருந்திருக்க வேண்டுமே?''
''ஆமாம்! சிறு வயதில் ராமகிருஷ்ண மடத்துக்குத் தினமும் போவார். அங்கு தண்ணீர் பிடித்துவைப்பது, தரையைப் பெருக்குவது போன்ற பணிகளைச் செய்வார். ரஜினியைக் கவனித்து வந்த குருஜிக்கு இவர் மீது ஒரு பாசம். தான் மாணவர்களிடையே சொற்பொழிவு ஆற்றும்போது எல்லாம், ரஜினியையும் அன்புடன் அழைத்து  உட்காரவைத்துக் கொள்வார். அப்போதும் சரி, இப்போதும் சரி... ஸிணீழீவீஸீவீ வீs ணீ ரீக்ஷீமீணீt லிவீstமீஸீமீக்ஷீ. நீங்கள் ஒன்று அவரிடம் பேசினால் ரொம்பப் பொறுமையாக, கவனமாகக் கேட்பார்... தெரியுமா?''
''ரஜினி குழந்தையாக இருந்தபோது எடுத்த போட்டோ ஏதாவது தர முடியுமா?''
''உண்மையில் ஒரு போட்டோகூட இல்லை. காரணம், அவரை யாரும் போட்டோ எடுக்க வில்லை. அண்மையில் ஒரு சமயம் குடும்பமாக அமர்ந்து என் ஆல்பம், எங்கள் குழந்தைகளின் போட்டோக்களை எல்லாம் பார்த்து ரசித்துக் கொண்டு இருந்தபோது திடீரென்று அவர், 'என்னுடைய குழந்தைப் பருவ போட்டோதான் ஒன்றுகூட இல்லை’ என்று லேசாகப் புன்னகைத் தார். எனக்கும் குழந்தைகளுக்கும் மனசு கஷ்டமாகிவிட்டது.
தன் போட்டோ இல்லை என்று சொன்னதும் அவருடைய கரங்களை ஆதரவோடு கெட்டி யாகப் பற்றிக்கொண்டேன். வீட்டில் என்னை அவர் 'ஜில்லு’ என்றுதான் அழைப்பார்! மறு விநாடி அவர் முகத்தில் சிரிப்பு மலர்ந்தது. 'பிலீவ் மீ! சின்ன வயசில் கறுப்பா இருந்தாலும்... துறுதுறுவென்று நன்றாகவே இருப்பேன்!’ என்றார் உடனே!''
''அவர் குழந்தைப் பருவம் சரி... பிற்பாடு புகழ் உச்சிக்குப்போன பிறகு தன் குழந்தை களோடு அவரால் நேரம் செலவிட முடிந்ததா?''
''முடியாமல்தான் போனது! ஐஸ்வர்யா பிறந்த சமயம்... அப்போது இவர் ரொம்ப பிஸி... இரவு பகலென்று பாராமல் உழைத்துக்கொண்டு இருந்த சமயம் அது. பிற்பாடு, எல்லாமே ஒரு கன்ட்ரோலுக்கு வந்த பிறகுதான் குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க முடிந்தது!''
''ஐஸ்வர்யா பிறந்த சமயம்பற்றி சொல்லுங் கள்... நீங்கள் மெட்டர்னடிக்குப் போனபோது ரஜினி எங்கு இருந்தார்?''
''அது ஒரு வியப்பான விஷயம்! ஐஸ்வர்யா பிறந்தது ஜனவரி 1-ம் தேதி. தன் 'பர்த் டே’யை உலகமே கொண்டாடுகிறது என்று தமாஷாக அவள் சொல்வாள். நியாயமாக ஜனவரி 26-ம் தேதிதான் அவள் பிறக்க வேண்டிய, டியூ டேட்!
ஜனவரி ஒண்ணாம் தேதி காலையில் என் வயிற்றில் திடீரென்று குழந்தையின் மூவ்மென்ட் இல்லை. சில நிமிஷங்களில் சரியாகிவிட்டது. அப்போது உதவிக்கு என் அம்மா கூடவே இருந்தார். காலையில் எனக்காக ஏதோ முக்கிய மாகக் கடைக்குப் போக வேண்டி இருந்தது அம்மா. 'ஒரு மாதிரி இருக்கு என்று சொல்கி றாயே... நான் அப்புறம் போகிறேனே?’ என்றார் அம்மா. 'அதெல்லாம் ஒன்றுமில்லை’ என்று அம்மாவை வற்புறுத்திக் கடைக்கு அனுப்பி விட்டேன். இவரோ ஷூட்டிங் போயாகிவிட்டது. திரும்ப இரவாகும். வீட்டில் தன்னந்தனியாக நான்!
திடீரென்று மறுபடியும் வயிற்றை ஏதோ பண்ணியது! வீட்டில் இரண்டு கார்களையும் அம்மாவும் அவருமாக எடுத்துக்கொண்டு போய்விட... 'சட்’டென்று என்னைக் கலவரம் சூழ்ந்துவிட்டது. அம்மாவை மடத்தனமாக அனுப்பிவிட்டோமே என்று என் மீதே கோபம் வர, கண்கள் கலங்கிப் போய் பூஜை அறைக்குள் சுவாமி படங்களுக்கு முன் உட்கார்ந்து 'கடவுளே... என்னைக் காப்பாற்று!’ என்று பிரார்த்தனை பண்ண ஆரம்பித்தேன். திடீரென 'க்ரீச்’சென்று கார் வந்து நிற்கும் சத்தம். மெள்ளத் திரும்பிப் பார்த்தால்... பூஜையறை வாசலில்... அவர்!
'ஜில்லூ! என்ன ஆச்சு?’ என்று பதறியவாறு அருகே ஓடி வந்தார். நான் விஷயத்தைச் சொன்னேன். அப்படியே என்னை அணைத்துத் தாங்கியவாறு காருக்குள் உட்காரவைத்தார். கார் வெலிங்டன் நர்ஸிங் ஹோமை நோக்கிப் பறந்தது. அவர் தோளில் என் தலையைச் சாய்த்தவாறு 'நீங்கள் எப்படி... திடீரென்று?!’ என்றேன் மெல்லிய குரலில். காரை வேகமாக ஓட்டிக்கொண்டே 'ஷூட்டிங் இன்று இல்லை... போரடித்தது. 'சரி, வீட்டுக்குப் போய் ஒரு தூக்கம் போடுவோம்’ என்று விநாடியில் ஏதோ தோன்றியது. உடனே, கிளம்பி வந்துவிட்டேன்!’ என்றார்.
நர்ஸிங் ஹோம் போன கையோடு லேபர் ரூமுக்கு ஸ்ட்ரெச்சரில் வைத்து என்னை அழைத்துக்கொண்டு ஓடினார்கள். மூன்று மணி நேரம் கழித்து ஐஸ்வர்யா பிறந்தாள். நேரே குழந்தையை எடுத்துக்கொண்டுபோய் அவர் கையில் கொடுக்கச் சொன்னேன். அத்தனை நேரமும் பதற்றத்துடன் யாரோடும் பேசாமல் வெளியே குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு இருந்தார் என்றும், அந்த நேரத்தில் முதன் முறையாக ஒரு சிகரெட்கூடப் பிடிக்கவில்லை என்றும் அப்புறம் கேள்விப்பட்டேன். 'டென்ஷ னாக இருந்தால், நிச்சயம் சிகரெட் பிடிப்பீர்கள். எப்படி மூன்று மணி நேரம் சிகரெட் பிடிக்காமல் உங்களால் இருக்க முடிந்தது?!’ என்று கேட்டேன். 'சாதாரண டென்ஷனுக்குத்தான் சிகரெட் பிடிக்கத் தோன்றும்... இது அதை எல்லாம் தாண்டிப் போய்விட்ட மகா டென்ஷன்!’ என்றார் சாவதானமாக!''
''இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு சிலரைப் போல, ஆண் வாரிசு இல்லையே என்று வருத்தம் இருக்கிறதா?''
''இல்லை! இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்வதும் நாட்டுக்குச் செய்யும் சேவை!’ என்பார் அவர். சிசேரியன் வேறு! மனைவியின் வயிற்றில் கத்தி... தையல்... இதெல்லாம் அவருக் குத் தாங்க முடியவில்லை. இந்தக் கஷ்டம் எல்லாம் தேவையா என்று ரொம்ப அப்செட் ஆவார். எங்கள் ரெண்டு பேருக்குமே பெண் 'குழந்தைகள் அதிகமாகப் பிடிக்கும். ஆண் குழந்தை இல்லையே என்று ஒருமுறைகூட நினைத்தது இல்லை!
அண்மையில் ஒரு முறை அவரிடம், 'உங்கள் பெரிய அக்காவும் திருமணமாகிப் போன பிறகு, உங்கள் வீட்டில் எல்லோருமே ஆண்கள்தான். இப்போது அப்படியே உல்டா ஆகிவிட்டது... நம் வீட்டில் பெண்கள்தான் மெஜாரிட்டி!’ என்று தமாஷ் பண்ணுவேன்.
எனக்கு அவரே ஒரு குழந்தை மாதிரிதான். இரண்டும் பெண் குழந்தைகள் என்று பேச்சு வரும்போது, 'உங்களுக்குத்தான் இரண்டுமே பெண் குழந்தைகள்... எனக்கு உங்களையும் சேர்த்து மூன்று குழந்தைகள். ஒரு ஆண்... இரண்டு பெண் குழந்தைகள்!’ என்பேன்.தலையை உயர்த்தி வாய்விட்டுச் சிரிப்பார் ரஜினி!'

நினைவு நாடாக்கள் ஒரு Rewind...

நினைவு நாடாக்கள் ஒரு Rewind...

வாலி
ஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
மெல்லிசை மன்னன்!
என்னை -
எங்கே
எப்போது பார்த்தாலும் -
'எப்படி யிருக்கிறார்?’ என்று...
அவர் பற்றி
அவர்கள் கேட்பார்கள்;
அவர்பால்
அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;
அதற்குக் காரணம்
அவரது -
விசும்பை விஞ்சி நின்ற
வித்துவத்துவம்;
அவரைக் காணாவிடத்தும்
அவர் மாட்டுக் கனிந்திருந்தது -
அவர்கள்
அனைவர்க்கும்...
ஓர்
ஓவாக் காதல்!
'அதுசரி;
அவர் யார்? அவர்கள் யார்?
சொல்லவில்லையே!’ என்று
சொல்கிறீர்களா? சொல்கிறேன்!
'பூ மழை
பொழிகிறது’ -
இது விஜயகாந்த் நடித்த படம்;
இசை R.D. பர்மன்!
'ரகசிய
போலீஸ்’ -
இது சரத்குமார் நடித்த படம்;
இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!
'தாய் வீடு’ -
இது ரஜினிகாந்த் நடித்த படம்;
இசை பப்பி லஹரி!
'தர்மம்’ -
இது சத்யராஜ் நடித்த படம்;
இசை உஷா கன்னா!
நான்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -
நால்வரைத்தான் -
நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -
அந்த 'அவர்’
ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!
ன் ஊரில் -
என் தெருவில் -
என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...
'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.
அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -
'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.
அதற்குக் காரணம் -
திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!
சினேகிதன் சம்பத் வீட்டில் ஒரு GRAMO PHONE இருந்தது; H.M.V. கம்பெனி தயாரித்தது.
சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -
'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.
முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!
இந்த
இசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.
ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி   வேண்டினேன்.
'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.
'H.M.V. கம்பெனியின் LOGO வாக  - ஒரு MEGA PHONE முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...
அது - ஆண் நாயா? பெண் நாயா?’
- இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -
'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.
'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.
'H.M.V. என்றால் - HIS MASTER'S VOICE என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -
H.M.V. என்பதை - HER MASTER'S VOICE என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.
ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -
'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.
ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -
கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.
கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!
ன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -
ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.
பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.
விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,
நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.
நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!
ரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -
ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,
உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!
சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!
பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -
பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -
பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.
'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -
WALTZ;
JAZZ;
- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், PIANO-வில் பிலிற்றுவார்.
விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -
விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!
அற்றை நாளில், அவரது பாடல்களில் ACCORDION அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் CELLO; DOUBLE-BASS-  எனப்படும் VIOLIN குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
VIOLIN-களில் - CHROMARIC; மற்றும் PIZZICATO பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.
ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.
என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை;  WHAT I AM TODAY I OWE HIM!
ட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -
'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -
அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!
ஹோட்டல் கன்னிமாராவில் -
சில ஆண்டுகள் முன்னம்,
'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.
சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -
அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.
ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.
அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!
'அண்ணனே! மெல்லிசை -
மன்னனே! - உன்னை
சந்திக்கு முன் - எனக்கு
சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -
சந்தித்த பின் - எனக்கு
சோறு தின்னவே நேரமில்லை!

வெறும்
விறகு; நான் -
வீணையானேன் - உன்
விரல்பட்ட பிறகு!

பலரிடம் நான்
பாட்டு எழுதியிருக்கிறேன்; என்
வரிக்கெல்லாம்
வருமானம் வந்தது;
உன்னிடம் பாட்டெழுத
உட்கார்ந்த பின்புதான் - என்
வருமானத் திற்கெல்லாம்
வரி வந்தது!’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...
'இசையே! எனக்கு
இசை!’ என -
இசையைத் தனக்கு
இசைய வைத்து - அன்னணம்
இசைந்த
இசையை -
இசைத்து
இசைத்து - அதன்
இசையைப் பெருக்கிய
இசையமைப்பாளர் -
எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.
அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:
'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது
விருதா?
விருது
வரா விடில் -
விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ
விருதா?’
- சுழலும்...

நினைவு நாடாக்கள் ஒரு Rewind...



வாலி
ஓவியம் : மணி, படம்: கே.ராஜசேகரன்
மெல்லிசை மன்னன்!
என்னை -
எங்கே
எப்போது பார்த்தாலும் -
'எப்படி யிருக்கிறார்?’ என்று...
அவர் பற்றி
அவர்கள் கேட்பார்கள்;
அவர்பால்
அவர்களுக்கு அவ்வளவு மரியாதை;
அதற்குக் காரணம்
அவரது -
விசும்பை விஞ்சி நின்ற
வித்துவத்துவம்;
அவரைக் காணாவிடத்தும்
அவர் மாட்டுக் கனிந்திருந்தது -
அவர்கள்
அனைவர்க்கும்...
ஓர்
ஓவாக் காதல்!
'அதுசரி;
அவர் யார்? அவர்கள் யார்?
சொல்லவில்லையே!’ என்று
சொல்கிறீர்களா? சொல்கிறேன்!
'பூ மழை
பொழிகிறது’ -
இது விஜயகாந்த் நடித்த படம்;
இசை R.D. பர்மன்!
'ரகசிய
போலீஸ்’ -
இது சரத்குமார் நடித்த படம்;
இசை லட்சுமிகாந்த் பியாரிலால்!
'தாய் வீடு’ -
இது ரஜினிகாந்த் நடித்த படம்;
இசை பப்பி லஹரி!
'தர்மம்’ -
இது சத்யராஜ் நடித்த படம்;
இசை உஷா கன்னா!
நான்கு படங்களும், நான் பாடல்கள் எழுதிய படங்கள்; இந்தப் படங்களின் இசையமைப்பாளர்களாகிய -
நால்வரைத்தான் -
நான் குறிப்பிட்டேன் 'அவர்கள்’ என்று; அந் நால்வரும் நலம் விசாரித்த -
அந்த 'அவர்’
ஆரெனச் சொல்கிறேன்; அதற்கு முன்பு, நான் கொஞ்சம் - என் சொந்த ஊரான ஸ்ரீரங்கம் வரை போக வேண்டியிருக்கிறது!
ன் ஊரில் -
என் தெருவில் -
என் வீட்டிற்கு நான்கு வீடுகள் தள்ளி, அதே வரிசையில்...
'சம்பத்’ என்றொரு சினேகிதன்; அவனுடைய சகோதரியின் கணவர் பெயர் திரு.ரங்கனாதன்.
அந்த ரங்கனாதன், திருச்சியிலிருந்து திருவரங்கத்திற்குத் தன் மாமனார் வீட்டிற்கு வரும்போதெல்லாம் -
'டேய்! உங்க அத்திம்பேர்கிட்ட என்னை அறிமுகம் பண்ணி வைடா!’ என்று நான் சம்பத்தை நச்சரிப்பேன்.
அதற்குக் காரணம் -
திரு.ரங்கனாதன் திரையுலகத்தோடு தொடர்பு உடையவர்!
சினேகிதன் சம்பத் வீட்டில் ஒரு GRAMO PHONE இருந்தது; H.M.V. கம்பெனி தயாரித்தது.
சாவி கொடுத்து இசைத் தட்டு மேல் ஊசியை உட்கார்த்தினால் -
'செந்தமிழ்த் தேன் மொழியாள்’ - கேட்கலாம்; 'பிறக்கும் போதும் அழுகின்றாய். இறக்கும் போதும் அழுகின்றாய்’ - கேட்கலாம்.
முன்னது டி.ஆர்.மகாலிங்கம்; பின்னது சந்திரபாபு!
இந்த
இசைத் தட்டுகளை - திரு.ரங்கனாதன் கையோடு கொண்டுவருவார், நான் 'சோறு தண்ணி’ இல்லாமல் கேட்பேன்.
ஒருமுறை திரு.ரங்கனாதனிடம் 'திராவிடப் பொன்னாடே’ போடச் சொல்லி   வேண்டினேன்.
'வாலி! நான் ஒரு கேள்வி கேட்பேன்; அதுக்கு கரெக்டா பதில் சொல்லிட்டா - எத்தனெ தடவெ வேணும்னாலும் அந்தப் பாட்டெ நான் போடுவேன்!’ என்றார்அவர்; 'கேளுங்க சார்!’ என்றேன் நான்.
'H.M.V. கம்பெனியின் LOGO வாக  - ஒரு MEGA PHONE முன்னாடி உட்கார்ந்திண்டு இருக்கிறதே - ஒரு நாய்...
அது - ஆண் நாயா? பெண் நாயா?’
- இப்படி ரங்கனாதன் கேட்டதும், சற்றும் யோசிக்காமல் நான் -
'சார்! அது ஆண் நாய்!’ என்றேன்.
'எப்படி?’ என வினவினார் ரங்கனாதன்.
'H.M.V. என்றால் - HIS MASTER'S VOICE என்று அர்த்தம்; தன் எஜமானனின் குரலைச் செவிமடுக்கும் அந்த நாய், பெண் நாயாயிருந்தால் -
H.M.V. என்பதை - HER MASTER'S VOICE என்று குறிப்பிட்டிருப்பார்கள்’ என்றேன்.
ரங்கனாதன் மகிழ்ந்தார்; உடனே, நான் இதுதான் தருணமென்று -
'சார்! நான் விஸ்வநாதன் ராமமூர்த்தியோட பரம ரசிகன். ஒரு தடவை நீங்க மெட்ராஸ் போறச்சே - என்னையும் அழைச்சுண்டு போய் அறிமுகப்படுத்திவெக்கணும் சார்!’ என இறைஞ்சினேன்.
ஏன் அவரிடம் அப்படிக் கேட்டேன் என்றால் -
கண்ணதாசன் தயாரித்த 'மாலையிட்ட மங்கை’; 'கவலையில்லாத மனிதன்’ - இந்தப் படங்களுக்கெல்லாம் பண உதவி செய்தவர் திரு.ரங்கனாதன்.
கண்ணதாசனின் ஆருயிர் நண்பர்; இவரைப்பற்றி கண்ணதாசன் 'வனவாச’த்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
திரு.ரங்கனாதனை, சினிமா வட்டாரத்தில் 'அம்பி’ என்றுதான் அழைப்பார்கள்!
ன் இதை இவ்வளவு விரிவாக எழுதினேன் எனில் -
எம்.எஸ்.விஸ்வநாதனிடம் ஒரு பாட்டா வது எழுதினால்தான், எனக்கு ஜன்ம சாபல்யம் என -
ஸ்ரீரங்கநாதரை வேண்டிக்கொண்டே இருந்தேன் நான்.
பிரார்த்தனை வீண் போகவில்லை; பெருமாள் திருக்கண் மலர்ந்தருளினார்.
விஸ்வநாத அண்ணனிடம் - 1963-ல் ஆரம்பித்து,
நாளது வரை நாலாயிரம் பாடல்கள் எழுதிவிட்டேன்.
நாலாயிரமும் நாலாயிரம்தான்; திவ்யப் பிரபந்தம் போல் திரைப் பிரபந்தம்!
ரண்டாயிரம் ஆண்டுகள் ஆனாலும், இறவாத பாடல்களை -
ஈங்கு விசுவநாதனின் ஆர்மோனியம்தான் ஈன்றது. எம்.ஜி.ஆர்; சிவாஜி - இவ் இருவரின் உதடுகளிலும் விசுவநாதனின் உன்னத மெட்டுகள் உட்கார்ந்ததால் தான்,
உலகத்தார் உள்ளங்களில் அவர்கள் போய் அமர முடிந்தது!
சாதா வார்த்தைகள், அவரது சங்கீதத்தில் தோய்த்தெடுத்த பின் - சாகாவார்த்தை கள் ஆகும்!
பின்னைக்கும் பின்னையாய்; முன்னைக்கும் முன்னையாய் -
பிறங்கும் பரம் பொருள் போல், விஸ்வநாதனின் வித்வத்வம் -
பிராசீனத்திற்கும் பிராசீனமாய்; நவீனத் திற்கும் நவீனமாய், விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது எனலாம்.
'லலிதாங்கி’யையும், 'ஆபோகி’யையும் லகுவாகக் கையாள்வார்; அதே, லலிதத் தோடும் லாகவத்தோடும் -
WALTZ;
JAZZ;
- இன்ன பிற மேலை நாட்டு இசை வகைகளையும், PIANO-வில் பிலிற்றுவார்.
விஸ்வநாதனின் வித்தகம் பற்றி, ஒற்றை வரியில் ஓதுவதாயின் -
விரலிலும் குரலிலும் கலைமகள் கடாட்சம் விரவி நிற்கும் புண்ணியவான் அவர்!
அற்றை நாளில், அவரது பாடல்களில் ACCORDION அழகுற இசைக்கப்படுவதைக் காணலாம்; மற்றும் CELLO; DOUBLE-BASS-  எனப்படும் VIOLIN குடும்ப வாத்தியங்களை யும், அவற்றின் தனித்தன்மை துல்லியமாகத் துலங்குமாறு பயன்படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கலாம்.
VIOLIN-களில் - CHROMARIC; மற்றும் PIZZICATO பாணிகளை இடமறிந்து இடம் பெறச் செய்வார், தான் இசைக்கும் பாடல்களின் பின்னணியில்; அவர் அறியாத மேலை நாட்டுச் சங்கீதமே இல்லை.
ஆயினும், அவ் அறிவை அளவோடு பயன்படுத்துவார்; சந்தனம் நிறைய இருக்கிறதே என்று - புட்டத்தில் பூசிக்கொள்ள மாட்டார்.
என் வாழ்வும் வளமும் அவரிட்ட பிச்சை;  WHAT I AM TODAY I OWE HIM!
ட நாட்டு இசையமைப்பாளர்கள், மிகுந்த மரியாதையோடு -
'எப்படியிருக்கிறார்?’ என நலம் விசாரித்தது -
அண்ணன் விஸ்வநாதனைப் பற்றித்தான்!
ஹோட்டல் கன்னிமாராவில் -
சில ஆண்டுகள் முன்னம்,
'சந்திரமுகி’ படம், கேஸட் வெளியீட்டு விழா நடந்தது; நான்தான் வெளியிட்டேன் - திருமதி.ஆஷா போன்ஸ்லே பெற்றுக்கொண்டார்.
சிவாஜி அவர்களின் புதல்வர்கள், திரு.ராம்குமார்; திரு.பிரபு இருவரும் -
அந்த விழாவில் விஸ்வநாத அண்ணனைக் கௌரவித்தார்கள்; அப்போது நான் விஸ்வநாத அண்ணனைப்பற்றி ஒரு கவிதை வாசித்தேன்.
ரஜினி, அந்தக் கவிதையைக் கேட்டுவிட்டுக் கண்ணீர் மல்க - 'அண்ணா! இந்தக் கவிதையை அப்படியே நான் பாலசந்தர் சாரைப் பார்த்து பாடணும்னு தோணுது’ என்றார்.
அந்தக் கவிதையின் சில வரிகளே நினைவில் உள்ளன; அவை இதோ!
'அண்ணனே! மெல்லிசை -
மன்னனே! - உன்னை
சந்திக்கு முன் - எனக்கு
சோற்றுக்கே வக்கில்லை; உன்னை -
சந்தித்த பின் - எனக்கு
சோறு தின்னவே நேரமில்லை!

வெறும்
விறகு; நான் -
வீணையானேன் - உன்
விரல்பட்ட பிறகு!

பலரிடம் நான்
பாட்டு எழுதியிருக்கிறேன்; என்
வரிக்கெல்லாம்
வருமானம் வந்தது;
உன்னிடம் பாட்டெழுத
உட்கார்ந்த பின்புதான் - என்
வருமானத் திற்கெல்லாம்
வரி வந்தது!’
- இப்படிப் போகும் அந்தக் கவிதை; நான் சொல்ல வருவது யாதெனில்...
'இசையே! எனக்கு
இசை!’ என -
இசையைத் தனக்கு
இசைய வைத்து - அன்னணம்
இசைந்த
இசையை -
இசைத்து
இசைத்து - அதன்
இசையைப் பெருக்கிய
இசையமைப்பாளர் -
எம்.எஸ்.வி. அவர்களுக்கு 'ஏன் பத்மா விருதுகள் வழங்கப்பட வில்லை?’ எனப் பலர் கேட்கலாம்.
அதற்கு அடியேன் சொல்லும் பதில் இதுதான்:
'விஸ்வநாதன் சாதனையை - அளப்பது
விருதா?
விருது
வரா விடில் -
விஸ்வநாதன் சாதனைகள் - ஆகுமோ
விருதா?’
- சுழலும்...

நானே கேள்வி... நானே பதில்!

அண்மையில் எதைப் படித்துச் சிரித்தீர்கள்?''
'' 'ஆகஸ்ட் 15-ம் தேதிக்குள் மத்திய அமைச்சர்கள் அத்தனை பேரும் தங்கள் சொத்துக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்’ என்ற மன்மோகனின் உத்தரவைப் பார்த்துதான்!''
­- கிருஷ்ண பாரதி, சென்னை-91.
''ஈழப் பிரச்னையில் கருணாநிதி அதைச் செய்யவில்லை, இதைச் செய்யவில்லை என்று விஜயகாந்த் குற்றம் சாட்டுகிறாரே?''
''மற்ற கட்சியினராவது உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி என்று போராட்டப் பாவனைகளாவது செய்தார்கள். ஆனால், ஈழப் போர் உச்சத்தில் இருந்தபோது விஜயகாந்த் இருந்தது 'விருத்தகிரி’ ஷூட்டிங்கில்!''
- பா.அமுதா, மதுரை.
'''ஆளைவைத்து எடை போடாதே’ என்பதற்கு உதாரணம்?''
''உப்புமா! பொதுவாக, சுமாரான படங்களை உப்புமா படங்கள் என்றும் அந்தப் படங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களை உப்புமா கம்பெனி கள் என்றும் சொல்வது வழக்கம். ஆனால், அமெரிக்கா - லாஸ் ஏஞ்சலீஸில் நடந்த சர்வதேச சமையல் கலைப் போட்டியில் கர்டோஸ் என்ற இந்தியர், உப்புமா சமைத்து முதல் பரிசு வென்று இருக்கிறார். முதல் பரிசு எவ்வளவு தெரியுமா, 50 லட்சம்!''
- கா.சங்கரி, தேனி.
''பாராட்டுவதா, இல்லையா என்று குழம்பிய விஷயம்?''
''பாகிஸ்தான் அதிபர் சர்தாரி சமீபத்தில் ஒரு விநோதமான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். பாகிஸ்தானில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள், பள்ளிகளில் சேர்க்கும்போது அப்பா பெயரைப் போட முடியாததால், தன் பெயரையே அப்பா பெயராகப் போடலாம் என்று அறிவித்து இருக்கிறார். ஆதரவற்ற குழந்தைகள் 'அப்பா பெயரை எழுத வேண்டாம்’ என்று சொன்னால் போதுமே. எப்படியோ, இது மட்டும் நிறைவேறினால்... சர்தாரிதான் பாகிஸ்தானின் 'தேசத் தந்தை’!''
-  மணிமொழி, மதுரை.
''வாயாடிகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமா?''
''இல்லையா பின்னே? உங்களுக்காக ஒரு குட்டிக் கதை. ஒரு பெண், குழாய் பழுதுபார்ப்பவருக்கு போன் செய்தாள். 'எங்க வீட்டுக் குழாய்களை இன்னிக்கு கட்டாயம் பழுது பார்த்துவிடு. நான் வீட்டில் இருக்க மாட்டேன். ஆனால், எங்கள் வீட்டில் ஒரு பெரிய நாய் இருக்கும். அது உன்னை ஒன்றும் செய்யாது. ஆனா ஒண்ணு, என்ன பண்ணினாலும் எங்க வீட்டுக் கிளியோட மட்டும் ஒரு வார்த்தைகூடப் பேசிடாதே’ என்று சொன்னாள்.
அவள் சொன்ன மாதிரியே அவரும் வீட்டுக்கு வந்து வேலை செய்துகொண்டு இருந்தார். அங்கே இருந்த நாய் ஒரு மூலையில் அமைதியாகப் படுத்து இருந்தது. கிளிதான் அவனை வேலை பார்க்கவிடாமல் பேசிப் பேசியே ரொம்பவும் படுத்தி எடுத்தது. அவனும் ரொம்பப் பொறுமையாக வேலை பார்த்துக்கொண்டு இருந்தான். கடைசியில் பொறுமை இழந்து போய், 'முட்டாள் கிளியே, வாயை மூடு’ என்று கத்தினான். அதற்கு அந்தக் கிளி என்ன செய்தது தெரியுமா?
'டைகர், அவனைக் கடி’ என்றது. அப்புறம் என்ன நடந்து இருக்கும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?''

ஒரு டாக்டர், தன் கிளினிக் டாய்லெட் குழாய் ரிப்பேருக்காக ஒரு பிளம்பரை அழைத்தாராம். அவனும் பத்து நிமிடத்தில் ஒரு சில வாஷர்களை மாற்றிவிட்டு, சிலதை டைட் செய்து விட்டு ரூ.1000- கேட்டதும் டாக்டர் அதிர்ந்து போனாராம். " நான் எம்.பி.பி.ஸ் படிச்ச டாக்டர்...என்னாலேயே பத்து நிமிடத்துல 1000 ரூபாய் சம்பாதிக்க முடியாது... " பிளம்பர் சொன்னான்: " நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் டாக்டர்...நான் டாக்டரா இருந்தபோது என்னாலேயும் அவ்வளவு சம்பாதிக்க முடியலை..."

'பல நூறு ஆனந்த்கள் வருவாங்க!''


சார்லஸ்
விஸ்வநாதன் ஆனந்த்... இப்போது உற்சாகத்தின் உச்சியில் இருக்கிறார். ஆனந்த்-அருணா தம்பதியின் 14 ஆண்டு காலத் திருமண வாழ்வில் புதிதாக ஓர் ஜூனியர் ஆனந்த்... அகில். புது வரவு தந்த உற்சாகம் அருணாவின் ஒவ்வொரு வார்த்தையிலும் எதிரொலிக்கிறது. ''ஏப்ரல் 9-ம் தேதி அகில் பிறந்தார். எங்க ரெண்டு பேர் பேருமே 'அ’வில் ஆரம்பிக்கிறதால, குழந்தை பேரையும் 'அ’வில் ஆரம்பிக்கிற மாதிரி அகில்னு வெச்சோம். அகில் நேரத்துக்கு ஏத்த மாதிரி நான் என்னை மாத்திக்கிட்டேன். ஆனந்துக்கு இப்போ அகில்தான் உலகம். ஆனந்த் ஃபாரின் போனாலும், வெப்காம் மூலமா அகில் பண்ற சேட்டைகளைப் பார்த்துட்டே இருப்பார்'' - அருணா பேசிக்கொண்டே இருக்க, ஆனந்த் ரசித்துச் சிரிக்கிறார்.
ஆனந்திடம் பேசினோம்...
''தொடர்ந்து நாலு வருஷமா உலக சாம்பியன் பட்டம் உங்ககிட்ட இருக்கு. அடுத்த வருஷம் பட்டத்தைத் தக்கவைக்க கடுமையா போராடணுமே?''
''அடுத்த வருஷம் போரிஸ் கெல்ஃபண்டுடன் மோதணும். அதுக்கு இப்போ இருந்தே ரெடியாகிட்டு இருக்கேன். பொதுவா, ஒரு துறையில் அனுபவம் வந்துட்டா, ஈஸியா ஜெயிக்கலாம்னு சொல்வாங்க. செஸ் விஷயத்தில் அது உண்மை இல்லை. இங்கே ஒவ்வொரு ஆட்டத்திலும் எதாவது ஒண்ணு புதுசா இருக்கும். அது எனக்குப் புதுப் பாடமா இருக்கும். அடுத்த வருஷமும் உலக சாம்பியன் ஆகணும்னு ஆசைப்படுறேன். பார்க்கலாம்!''
''அடுத்த ஆனந்த் யார்?''
''இந்தக் கேள்விக்குப் பதில் சொல்லத்தான் அதிக நேரத்தைச் செலவழிச்சுட்டு இருக்கேன். இந்தியா முழுக்க 8,000 பள்ளிகளில் என்.ஐ.ஐ.டி-யுடன் இணைந்து 'மைண்ட் சாம்பியன்ஸ்’ங்கிற பேர்ல செஸ் போட்டிகள் நடத்திட்டு இருக்கோம். சரியான நேரத்தில்... பல நூறு ஆனந்த்கள் வருவாங்க!''
''உங்களுக்கு டாக்டர் பட்டம் கொடுக்கும்போது, 'நீங்கள் இந்தியரே இல்லை’னு சர்ச்சையைக்  கிளப்பினாங்களே... அந்தச் சம்பவம் உங்களைக் காயப்படுத்துச்சா?''
''நான் தமிழ்நாட்டில் பிறந்தேன். இந்தியாவுக்காகத்தான் பல வருஷமா விளையாட் டிட்டு இருக்கேன். இந்திய பாஸ்போர்ட்தான் வெச்சிருக்கேன். என் மனைவி சென்னையில்தான் இருக்காங்க. அப்படி இருக்கும்போது, 'நான் இந்தியன் கிடையாது!’ன்னு யாரோ ஒருத்தருக்குச் சந்தேகம் வந்திருக்கு. அந்தப் பிரச்னையை நான் அப்போதே மறந்துட்டேன். அந்த சம்பவம் என்னைக் காயப்படுத்தவே இல்லை!''
''செஸ் போர்டில் ஒரு முடிவு எடுக்க நீங்கள் நீண்ட நேரம் எடுத்துக்கொள்கிறீர்கள். நிஜ வாழ்க்கையில் எப்படி?''
''ஹா...ஹா... செஸ் ஒரு விளையாட்டு. ஆனால், வாழ்க்கையில் அதுபோல் இருக்க முடியாது. பெர்சனல் வாழ்க்கையில் அனைத்துமே இன்ஸ்டன்ட்தான்!''
''உங்கள் விளையாட்டு மூளை சம்பந்தப்பட்டது. மனம் ஏதேதோ கணக்குப் போட்டுக்கொண்டே இருக்கும். உங்களை எப்படித்தான் ரிலாக்ஸ் செய்துகொள்கிறீர்கள்?''
''மியூஸிக்தான். நிறையப் பாடல்கள் கேட்பேன். குறிப்பாக, பழைய தமிழ்ப் பாடல்கள். அதுவும், இளையராஜாவின் இசை என்றால், ரொம்பப் பிடிக்கும்!''
''சமீபத்தில் உங்களைச் சிரிக்கவெச்ச சம்பவம் எது?''
''கொஞ்ச நாள் முன்னாடி, சென்னை ஏர்போர்ட்டில் இருந்து வெளியே வந்துட்டு இருந்தேன். ஒரு லேடி என்னைப் பார்த்துக்கிட்டே வந்தாங்க. அவர் என்கிட்ட பேசப் போறார்னு தெரிஞ்சது. செக்யூரிட்டி கேட்டைத் தாண்டி வந்ததும், தடதடன்னு ஓடி வந்தார். என் பக்கத்துல வந்து, 'சார் நீங்க கடைசியா நடிச்ச படம் சூப்பரா இருந்துச்சு!’ன்னு சொல்லிட்டு கை கொடுத்தார். என்னால் சிரிப்பை அடக்க முடியலை. டி.வி-யில் வர்ற எல்லாரையுமே நடிகர்னுதான் நினைப்பாங்கபோல!''
வ்வளவு அடித்தாலும் தாங்கும் ரொம்ப நல்லவர்களாக மக்கள் இருப்பதால், எரிபொருள் விலையை உயர்த்தும்போது எல்லாம், மத்திய அரசு கவலைப்படுவதே இல்லை. போராட்டம் நடத்தி கோஷம் போட்டுவிட்டு, மக்களும் எதிர்க் கட்சிகளும் தானாகவே ஓய்ந்துவிடுவார்கள் என்பதில் தெளிவாக இருக்கிறது டெல்லி. மாநில அரசுகளின் கடமையோ - ஒரு கண்டன அறிக்கையோடு முடிந்துபோகிறது!

இந்த விலை உயர்வின் 'பட்டாம்பூச்சி விளைவு’ மணலில் தொடங்கி மைசூர் போண்டா வரை எதிரொலிப்பதால்... அடி வயிற்றில் குத்து வாங்கித் துடிப்பது பெரும்பாலும் அடித்தட்டு மக்கள்தான்!
மரபுசாரா எரிசக்தி, மாற்று எரிபொருளுக்கான ஆய்வு என்று தொலைநோக்குச் சிந்தனைகொண்ட அறிஞர்களின் முயற்சிகளுக்கு அரசாங்கம் தருவது சம்பிரதாய மரியாதை மட்டுமே. சர்க்காரின் சட்டங்களும் திட்டங்களும் மாற்று எரிசக்தியின் உற்பத்தி - உபயோகம் நோக்கி மக்களை ஈர்ப்பதாகவும் இல்லை.
குடும்பங்களில் ஆளுக்கொரு வாகனம் என்று பெருகிப்போனதற்குக் காரணமே, இந்த அவசர யுகத்துக்கு ஏற்ப பொது உபயோகப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதில் மாநில அரசுகள் உரிய அக்கறை காட்டாமல் இருப்பதுதான். அரசாங்கப் போக்குவரத்துச் சாதனங்கள் தரமாகவும், துரிதமாகவும், முழுமை யாகவும் இருந்துவிட்டால், சாலைகளை அடைத்துச் செல்லும் படகு கார் பயணி களும்கூட, பஸ்ஸிலும் ரயிலிலும் பயணிக்கத் தாமாக முன்வருவார்கள்!
அப்படி ஒரு நிலையை அரசாங்கம் சாதித்துவிட்டால், சாலைகளில் நெரிசல் ஏது? கக்கும் புகையில் சிக்கி நிற்கும் காத்திருப்பு ஏது? நகராமல் உறுமும் வாகனங்களில் இருந்து வீணாக எரிபொருள் ஆவியாகும் அவலமும்தான் ஏது?
தமிழகத்தையே எடுத்துக்கொண்டால்... அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன்   சென்னை மெட்ரோ ரயில் திட்டம் குறித்து வெளியான அறிவிப்பு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியில் இதே திட்டம் அன்றாடப் பயணிகளின் அவதிக்கு வெற்றிகரமான தீர்வாக மாறியதை அனுபவபூர்வமாகப் பார்த்த பிறகும், எதற்காக இங்கே அரசியல் குழப்படி விளையாட்டு?
இருட்டைச் சபித்தே காலத்தைக் கழிக்காமல், மெழுகுவத்தி ஏற்றிக்கொள்வதுதானே புத்திசாலித்தனம்?!

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹாய் மதன் கேள்வி - பதில்

சினிமாவில் ஒரு மழைக்காலம்!
கே.அகஸ்தீஸ்வரன், மயிலாடுதுறை.
 உங்கள் மனம் கவர்ந்த இசையமைப்பாளர் (இந்தியாவில்) யார்? ஏன்?
இந்திய அளவில் என்றால், நௌஷாத்! காரணம், கடைசி மூச்சு வரை அவர் வேறு எந்த மேலை நாட்டு இசையையும் காப்பி அடித்ததே இல்லை. அத்தனை அற்புதமான ட்யூன்களும் அவர் இதயத்தில் இருந்து இந்திய ராகங்களுடன் பிறந்தவை. ஆகவே தான், அவர் சென்னை வந்தபோது, நம்ம இளையராஜா அவருடைய காலைத் தொட்டு வணங்கினார்!
ஜெ.ராமன், திருச்சி.
தமிழ் சினிமாவில் முக்கியமான காட்சிகளில் எல்லாம் ஏன் மழை வருகிறது?
மழை பெய்தால்தானே நனையலாம்?!  சில சோகமான, காதலான, பயங்கரமான காட்சிகளுக்கு மழை என்பது கூடுதல் எஃபெக்ட் தருவது உண்மைதான். சினிமா வில் 'முக்கியமான மழை - தேவை இல்லாத மழை’ என்று இருவித மழைகள் உண்டு. பார்க்கும்போதே உங்களால் கண்டுபிடிக்க முடியும்!
எஸ்.நவீன், திண்டுக்கல்.
வடிவேலு அவ்வளவுதானா?
அவ்வளவுதான் - 'அரசியல் திரை’யில்! தமிழக மக்களுக்கு எப்போதுமே 'காமெடி டிராக்’ பிடிக்கும். வடிவேலு பிரசாரத்தையும் அப்படியே எடுத்துக்கொண்டு ரசித்தார்கள். அதில், அவர் இப்படி மயங்கி இருக்கக் கூடாது. ஆனால், வெள்ளித் திரையில் வடிவேலு 'அவ்வளவுதானா’க வாய்ப்பு இல்லை. காரணம், அவர் திறமையான நகைச்சுவை நடிகர். ரைட் நௌ - தி பெஸ்ட்!
அ.கல்யாணம், பரவாக்கோட்டை.
'ஆரண்ய காண்டம்’ படத்தில் உங்களை அசத்தியவர் யார்?
இல்லாத ஹீரோ! அதாவது, படத்தில் ஹீரோ என்பவரே கிடையாது. எல்லோருமே எதற்காகவோ போராடுகிறார்கள். 'ஆரண்ய காண்டம்’ தமிழில் ஓர் அசாத்திய முயற்சி!
இந்தப் படம் ஒரு திருப்புமுனையாக, ஒரு துடுப்பாக அமைந்தால், தமிழ் சினிமாவில் வேறு ஒரு நல்ல பாதை கிளர்ந்து எழும். அந்தத் துடுப்பை வைத்துக்கொண்டு தமிழ் சினிமா என்னும் படகை பல சர்வதேச சினிமா துறைமுகங்களுக்கு எடுத்துச் செல்லலாம். அந்தத் துடுப்பைத் தூக்கிப் போட்டுவிடாதீர்கள்!
முசிறி தேவன், கோவை.
தமிழ் சினிமாவுக்கு சென்சார் தேவையா?
விகடனுக்கு சென்சார் தேவையா? விகடனேதான் சென்சார்! அதேபோல சினிமாவும் ஆக வேண்டும். இங்கே சென்சார் போர்டில் இருந்தவர்களின், இருக்கிறவர்களின் நீதிபதித்தனத்தையும் சினிமா அறிவையும் ரசனையையும் சோதிக்க, ஒரு 'சென்சார்-சென்சார் குழு’ அமைக்கலாமா? எத்தனை பேர் 'பாஸ்’ பண்ணுவார்கள்?
பெல்ஜியம், டென்மார்க், ஆஸ்திரியா, போர்ச்சுகல் போன்ற பல நாடுகளில் சென்சார் போர்டு கிடையாது. அந்த நாடுகள் 'ப்ளூ ஃபிலிம்’களை மட்டுமேவா எடுத்துக்கொண்டு இருக்கின்றன? படங்களுக்கு என்று 'சர்டிஃபி கேட்’ மட்டுமே போதுமானது. எல்லை மீறினால், ஆபாசத் தடுப்புச் சட்டம்இருக்கவே இருக்கிறது. சென்சாருக்கு அதிக அதிகாரம் தந்தால், என்ன ஆகும் தெரியுமா? சென்சார் சொல்லி ரஷ்யா, இத்தாலி, ஜெர்மனி நாடுகள் (உலகப் போரின்போது) ஒரு படத்துக்குத் தடை விதித்தன. படம்: டிஸ்னியின் 'மிக்கி மவுஸ்’!
செந்தில் ஆனந்தி, திருநெல்வேலி.
உங்களுக்கு டைரக்டர் ஆகும் எண்ணம் உண்டா?
ஆனானப்பட்ட கமல்ஹாசன் என்னிடம் ஒரு முறை கேட்ட கேள்வி இது! 'அந்த ஆசையே கிடையாது. பாதி ஷூட்டிங்கில் டென்ஷன் காரணமாக மயக்கம் போட்டு விழுந்து... என் முகத்தில் தண்ணி தெளிக்க வேண்டியிருக்கும்!’ என்று பதில் சொன்னேன். சில விநாடிகள் என்னையே புன்னகையோடு பார்த்துவிட்டு, 'இவ்வளவு ஓப்பனா சொல்றீங்களே... ஆனால், அது உண்மைதான்!’ என்றார் கமல். (நிஜ) இயக்குநர் ஆக... நீங்கள் ஒரு போராளியாக வேண்டும். எனக்குப் போராளித்தனம் நெற்றியில் இருந்து உச்சி மண்டைக்குள் மட்டும்தான் உண்டு!
எஸ்.சண்முகப்ரியா, குளிக்கரை.
தமிழ் சினிமாவில் மெலடி காலம் முடிந்துவிட்டதா?
மெலடி என்பது மெல்லிய காலடி! அது எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கும். சில சமயம் கூச்சல் பாடல்களினால் அது நம் காதில் விழுவது இல்லை. சொறிகிற பாடல்கள் வேறு, வருடுகிற பாடல்கள் வேறு. ராஜா, ரஹ்மான், ஹாரிஸ், வித்யாசாகர்... போன்ற எல்லோரும் அற்புதமான திறமை யைக் காட்டியிருப்பது மெலடியில்தான் என்பது என் தாழ்மையான கருத்து!

Tuesday, June 28, 2011

தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா

தூய மனமே கடவுள் துயிலும் இடம்!'' - பேராசிரியர் சாலமன் பாப்பையா
நலம், நலமறிய ஆவல். டாக்டர் விகடன் வழங்கும் ஆரோக்கியப் பக்கம்
''கிடைத்ததில் பிடித்ததை எல்லாம் ஒரு கை பார்ப்பதுதான் 20 வயது வரை நம் வாழ்க்கை சரிதம். அதன்பிறகு மனைவியின் குளிர் பார்வையில், கனிவான பேச்சில் உருகிக் கலந்து, உண்டு மகிழ்ந்து வளர்ந்த சதையின் பளபளப்பில் பெருமைப்படுகிறோம். நாற்பதைக் கடந்ததும், பட்டினத்தாரின் மொழியில் இந்த 'நாற்றப் பாண்டம் பீற்றல் துருத்தி’ ஆகிவிடுகிறது. 'நான் ஒருத்தன் இருக்கிறேன் என்பதை எண்ணாமல், உன் வாய்க்கும் மனதிற்கும் வசப்பட்டதை எல்லாம் வாரிச் சுருட்டி விழுங்கினாயே... இப்போது என் முறை; உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று நமக்கு சவால்விடும் உடம்பு. விளைவு... உடம்பின் அலைக்கழிப்பு ஆரம்பமாகிவிடும். அப்போதுதான் 'நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதும், 'சுவர் இருந்தால்தான் சித்திரம்’ என்பதும் கிழக்கின் வெளிச்சக் கீற்றாய் நமக்கு விளங்கத் தொடங்கும். ஆனால், காலம் கடந்துவிட்டதே! என்ன செய்யலாம்?'' - வாழ்வியல் வடிவத்தைச் சொல்லி ஆரம்பிக்கிறார் பேராசிரியர் சாலமன் பாப்பையா. பட்டிமன்றத்தின் மூலமாக பட்டி தொட்டி எங்கும் பெயர் பெற்றவர். உடலையும் மனதையும் மையப்படுத்தி, 'வாதமும் நானே... தீர்ப்பும் நானே’ என்கிற பாணியில் இங்கே பேசுகிறார் சாலமன் பாப்பையா...

''சிறுவயதிலேயே, நம் உடம்பை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதைத்தான், 'மாலை முழுவதும் விளையாட்டு, அதை வழக்கப்படுத்திக்கொள் பாப்பா’ என்று பாடினான் பாரதி. இந்த மந்திரத்தை, பிள்ளைகள் மனதிற்குள் நாம் இளம் பிராயத்திலேயே விதைத்தால், பிற்காலத்தில் 'உடலை வளர்த்தேன்; உயிரை வளர்த்தேன்’ என்று அவர்கள் நன்கு உணர்ந்து, உடலையும், உள்ளத்தையும் பக்குவமாய் பார்த்துக்கொள்வார்கள். ஆங்கிலேயர்கள் இதே பாணியைத்தான் பின்பற்றினார்கள். நம்மவர்களும் அந்தக் காலத்திலேயே அதை ஏற்றுக்கொண்டு, 'கீதையைப் படிப்பதற்குச் சமமாக’ விளையாட்டுத் திடலில் தங்களின் உடம்பையும் உள்ளத்தையும் பக்குவமாய் வளர்த்துக்கொண்டனர். ஆனால், என்ன நேர்ந்ததோ தெரியவில்லை! நம்மை நாமே ஆளத்தொடங்கிய பிறகு அதெல்லாம் அரிதாகிப்போனது. பண வளம் பெருக்கும் கல்வி முறை பெருகியதே தவிர, மன நலத்தோடு உடல் நலம் பேணும் கல்வி பெரும்பாலும் இல்லாமலே போனதை சாபக்கேடு என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பாலான பெற்றோர்கள், 'என் பிள்ளை நல்லா படிக்கணும். அவன் நிறைய மார்க்ஸ் வாங்கணும். விளையாடிப் பொழுதைக் கழிக்காமல் எந்த நேரமும் படிப்புன்னு புத்தகமும் கையுமாகவே இருக்கணும்!’ என நினைக்கிறார்கள். நன்றாகப் படிக்கணும், நிறைய சம்பாதிக்கணும் என்பதுதான் இன்றைய பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனால் இந்த மண்ணைச் சார்ந்து உடலையும் உள்ளத்தையும் ஒருசேர வளர்த்து பண்படுத்தும் மனவளக்கலையில் பயிற்சி பெறாமலேயே நம் குழந்தைகளின் கல்விக்காலம் கடந்துவிடுகிறது.
பணம் பெருக்கும் போதனையை மட்டுமே சொல்லித் தரும் கல்விக் கூடங்களில் இருந்து விடுதலை பெற்ற பிறகு, வேலை; அதன்பிறகு திருமணம்! அப்போது நம் வீட்டிலும் சரி... வெளியிலும் சரி... உடல் நலம் காக்க ஏது நேரம்? ஏது இடம்? பல்வேறு தேவைகளும், வாழ்க்கை நெருக்கடிகளும், எதிர்பாராத சம்பவங்களும், கவலை மேகங்களாய் அடர்ந்து, படர்ந்து உள்ளத் தளர்ச்சியையும் உடற் சோர்வையும் பெருக்கி விடுகின்றன. அப்போது பதுங்கிக் கிடந்த நோய்க் கூட்டம் பரம்பரை சொத்தாய், தனி விதைப்பாய் முளைத்து தாண்டவமாடத் தொடங்கிவிடுகின்றது. இதிலிருந்து விடுதலை பெறும் வழியும் உண்டு! அழுக்குப் போகக் குளித்து, விரும்பிய வாசனைப் பொருட்களைப் பயன்படுத்தி உடம்பை சுத்தமாக்கிக் கொள்கிறோம். உள்ளத்துள் குவிந்துவிடும் தவறான - தீய எண்ண அழுக்குகளை எப்படியப்பா போக்குவது? இது என்னய்யா வேடிக்கை... உடல் நலம் பேணுவது குறித்துக் கேட்டால் உள் நலன் பற்றிச் சொல்கிறீரே என்கிறீர்களா? ஆம்... உடல் நலத்துக்கு இன்றியமையாதது உள் நலம்தான்!
'உள்ளம் பெருங் கோயில்...
ஊண் உடம்பு ஆலயம்!’
நாம் வணங்கும் கடவுள் நம் உள்ளத்தினுள் தங்கினால், உடல் நலம் பெருகி ஒரு தெய்வீகக் களை நமக்கு ஏற்படும். அப்படியானால் மனத்தின் முந்தைய அழுக்குகளைப் போக்குவதும், புதிதாகச் சேரவிடாமல் தடுப்பதும் எப்படி? நம் பெற்றோர் நமக்குக் காட்டிய கடவுளின் வடிவமும், நாமமுமே போதும். அந்த நாமத்தின் மீது ஆழமான நம்பிக்கை வைக்கவேண்டும். 'சாதி, சமயம், கல்வி, பதவி, பணம், திறமைகள் எல்லாவற்றிலும் நான் உயர்ந்தவன்’ என்ற  எண்ணம் நமக்குள் வளரவிடக்கூடாது. அப்படியரு எண்ணம் நம்மையும் அறியாமல் நமக்குள்ளே எழுந்தாலும், இறைவனின் திருநாமத்தை மனதிற்குள் சொல்லியே அதை அடித்துத் துரத்த வேண்டும்!'' - தீர்க்கமாகச் சொல்கிறார் பாப்பையா. கடவுளை நண்பனாகக் கருதும் பக்குவத்தை தொடர்ந்து கற்றுத் தருகிறார் பாப்பையா.
''எத்தனை நெருக்கடி வந்தாலும்,  படுக்கையில் விழும்பொழுதும் எழும்பொழுதும் விழிகளை மூடி இறைவன் திருநாமத்தை இதயத்திற்குள் பலமுறை உள்ளார்ந்து உச்சரிக்கவேண்டும். காலைக் கடனை முடித்தவுடன் கண்டதையும் மனத்துக்குள் போட்டுக்கொள்ளாமல், கவலையை மறந்து கடவுளின் திருநாமத்தை ஜபித்துக்கொண்டே, பெரிய கோயில்களின் வெளிச்சுற்றுக்கள் அல்லது வசதிமிக்க வெளிப்பரப்பில் வேக நடை போடுங்கள். வியர்வை அடங்கி குளித்து முடித்ததும், நம் வீட்டில் உள்ள பூஜை அறையில் அமர்ந்து, கடவுளின் திருப்பெயரை சொல்லிச் சொல்லி அவனோடு மனம் திறந்து பேசலாம். அடிகளார்களின் பாடல்களைப் பாடி மகிழலாம். ஏன்... தன் பக்குவ நிலைமைக்கு ஏற்ப கவலைகளை அவனிடம் சொல்லி அழக்கூட செய்யலாம்! மனம்விட்டும் பேசுவதே மகத்தான மருந்து. கடவுளை உங்களின் ஆத்மார்த்த நண்பனாக நினைத்துக்கொள்ளுங்கள்.
எல்லா சமயத்தவரும் இறை மக்களே என்று எண்ண வேண்டும். அனைத்துக் கோயில்களில் இருப்பதும் ஓர் இறைவனே என்று நம்ப வேண்டும். எங்கெல்லாம் வழிபாடு நடைபெறுகிறதோ, அங்கே அதுவும் அவன் வழிபாடே என்று முழு நம்பிக்கையோடு வழிபடவேண்டும். 'தன் பெண்டு தன் பிள்ளை’ என்று எண்ணிப் பணம் சேர்க்கும் பண்பில் வளராமல், இறைவன் கொடுத்த வளம் அவன் மக்களுக்கும் என்று எண்ணி செயல்பட்டால் உள்ளம் அவன் கோயிலாகிறது. அந்த கோயிலுக்குள் தீய சிந்தனை என்னும் அழுக்கு ஒருபோதும் சேராது... மன அழுக்கு இல்லாத உடலில் கடவுள் குடியிருப்பார். அவர் குடியிருக்கும் கோயிலுக்கு நலமும் வளமுமே வாய்க்கும். அத்தகைய வளத்தோடு வாழ்வதற்கான வழிகளை நாமும் தேடுவோமா?'' - பட்டிமன்றத் தீர்ப்பைப்போலவே பளீர் சிரிப்பில் வாழ்வியல் தத்துவத்தைச் சொல்லி முடிக்கிறார் பாப்பையா.

Monday, June 27, 2011

Agreement on DRS

The ICC's chief executives' committee has unanimously agreed to make a modified version of the Decision Review System (DRS) mandatory in all Tests and one-day internationals. The mandatory terms and conditions for the DRS that have now been recommended to the Executive Board for approval on Tuesday will now consist of infra-red cameras and audio-tracking devices with the "ball-tracker" having been removed from the ICC's original compulsory list of DRS technologies.

Sunday, June 26, 2011

12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள்

ரந்த மனம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், 9.5.2011 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து, 16.5.2012 வரை ஜென்ம குருவாக அமர்கிறார். அவர் உங்களின் 5-ஆம் வீட்டை தனது அருட்பார்வையால் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

எனினும் ஜென்மகுரு என்பதால், உடல்நிலை பாதிக்கும். ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைபாடு ஏற்படலாம். கணவன்- மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவு வரக்கூடும். ஆனாலும் குரு உங்களின் 7-ஆம் வீட்டை பார்ப்பதால் கடுமை குறையும்.


மகளுக்கு நல்லவிதமாக திருமணம் முடியும். சொத்து விஷயங்கள் சாதகமாகும். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணிய க்ஷேத்திரங்களுக்குச் சென்று வருவீர்கள்.அசைவ, கார உணவுகளைத் தவிர்க்கவும். தண்ணீரைக் காய்ச்சி குடிக்கவும். திடீர் பயணங்களால் கையிருப்பு கரையும். குரு பகவான் 7-ஆம் வீட்டையும் பார்ப்பதால் மனைவி வழியில் ஓரளவு மகிழ்ச்சியுண்டு. வீட்டில், தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கோலாகலமாக நடக்கும். சித்தர்களின் ஆசி கிட்டும். வழக்குகளில் பின்னடைவு விலகும். பாக்கிய வீடான 9-ல் குருவின் பார்வை விழுவதால், எதிர்பார்த்த பணம் தக்க நேரத்தில்  வந்துசேரும். தந்தைவழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அரசியல்வாதிகள் கோஷ்டிப் பூசலில் சிக்க வேண்டாம். திடீரென புதிய பதவியில் அமர்த் தப்படுவீர்கள். அக்கம்பக்கத்தாரிடம் குடும்ப விஷயங்களைச் சொல்லவேண்டாம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 முதல் 21.7.2011 வரை மற்றும் 11.10.2011 முதல் 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வ தால், அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் கவனமாக இருக்கவேண்டும். பண இழப்பு, ஏமாற்றம், நெஞ்சு வலி, செரிமானக் கோளாறு, வீண்பழி, வி.ஐ.பி-களுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும்.
22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக எதிர்ப்பு, மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழலாம். காய்ச்சல், சளித் தொந்தரவு, சிறு விபத்துகள், வீண் அலைச்சல், வரக்கூடும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.
வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களை அறிந்து, முதலீடு செய்யுங்கள். சிலரது ஆலோசனையால் நஷ்டம் ஏற்படலாம். வாடிக்கை யாளர்களிடம் கனிவு தேவை.
ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். பக்கத்துக் கடைக்காரர் களைப் பகைக்கவேண்டாம். ஸ்டேஷனரி, உணவு, கெமிக்கல், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். பங்குதாரர்களிடம் சலசலப்புகள் இருந்தாலும் பெரிய பாதிப்புகள் இருக்காது.
உத்தியோகத்தில் போராட்டங்கள் ஓயும். சவால்களைச் சமாளிக்கும் சக்தி கிடைக்கும். கௌரவப் பதவிகளால், ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். சக ஊழியர்கள் உங்களைக் குறை கூறினாலும் பொறுத்துக் கொள்ளுங்கள்.
மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி- சம்பளம் உயரும். ஜூன், பிப்ரவரி மாதங்களில் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். கணினித் துறையினருக்கு சம்பளம் உயரும்.
கன்னிப் பெண்கள், எவரையும் எளிதில் நம்பிவிட வேண்டாம். பெற்றோர் ஆலோசனைப் படி செயல்படவும். மாதவிடாய் கோளாறு, மன உளைச்சல் வந்துபோகும். தடைப்பட்ட கல்வியை முழுமையாக முடிக்கப்பாருங்கள். வருட மத்தியில் திருமணம் கூடி வரும்.
மாணவர்களே, நேரத்தை வீணடிக்காமல் பாடத்தில் கவனம் செலுத்துங்கள். விளையாட் டில் பதக்கம் உண்டு. கலைஞர்கள், விமர்சனங் கள் வந்தாலும் அஞ்சவேண்டாம்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்கள் உடலையும், மனதையும் திடப் படுத்துவதுடன், பிரச்னைகளை எதிர்கொள்ளும் மனப் பக்குவத்தையும் ஓரளவு பண வரவையும் தருவதாக அமையும்.


ப்போதும் சிரித்த முகத்துடன் திகழ்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்களின் விரய வீடான 12-ஆம் வீட்டில் அமர்கிறார். செலவுகளைச் சுருக்குங்கள்.
அஷ்டமாதிபதியான குரு 12-ல் மறைவதால் எதிர்பாராத முன்னேற்றமும், எதிர்பார்த்த விஷயத்தில் ஏமாற்றமும் ஏற்படும். புதிய நண்பர்கள் கிடைப்பர். குடும்பத்தாரிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். உங்கள் விஷயத்தில் மூன்றாம் நபர் தலையிடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
சில காரியங்கள் இழுபறியாகி முடியும். முக்கிய பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்க வேண்டாம். புண்ணிய ஸ்தலங் களுக்குச் சென்று வருவீர்கள். குரு உங்கள் 4-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தாயாருடனான மனஸ்தாபம் நீங்கும். தாய்வழி உறவுகளால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்து வந்துசேரும். வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும்.
குரு 6-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சிலநேரம்,  எதிரிகளாலும் ஆதாயம் கிடைக்கும். இழுபறியான வழக்குகள், சாதகமாகும்.
குரு பகவான், 8-ஆம் வீட்டைப் பார்ப்ப தால், அயல்நாட்டுப் பயணங்கள் இருக்கும். அரசு விஷயங்கள் சுமுகமாக முடியும். அரசியல் வாதிகள், தலைமையை விமர்சிக்கவோ, புதிய பதவிக்கு ஆசைப்படவோ வேண்டாம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில், உங்களின் பலம்- பலவீனத்தை உணர்வீர்கள். மருத்துவச் செலவுகள், திடீர்ப் பயணங்கள் உண்டு. மகான்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.
22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் உங்கள் ராசி நாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பண வரவு உண்டு.  கௌரவப் பதவிகள் தேடி வரும். தடைப்பட்ட கல்யாணம் முடியும்.
2.5.2012 - 16.5.2012 வரை குரு உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அரசால் ஆதாயம் அடைவீர்கள். பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டைச் சீரமைப்பீர்கள்.
வியாபாரத்தில் புதிய மாற்றங்கள் நிகழ்த்து வீர்கள். பாக்கிகள் வசூலாகும். கடனுதவி பெற்று புதிய முதலீடுகள் செய்வீர்கள். பணியாட்களிடம் தொழில் ரகசியங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். கமிஷன், ஏஜென்சி, மருந்து மற்றும் உர வகைகளால் லாபம் உண்டு. இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம்.
ஜூன் 15 முதல் ஆகஸ்டு 15 வரையிலும் அதிக லாபம் கிடைக்கும். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத் தாகும். பங்குதாரர்களை அனுசரித்துச் செல்லவும்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மூத்த அதிகாரிகளிடம் அதிக நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். வீண் விவாதங்களைத் தவிர்க்கவும். செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுமுன் கவனம் தேவை.
கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள், உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எந்தச் சூழலிலும் பெற்றோரின் ஆலோசனையை அலட்சியப்படுத்தாதீர்கள். வருட பிற்பகுதியில் கல்யாணம் நடக்கும்.
மாணவர்கள், படிப்பில் அலட்சியத்துடன் நடந்துகொள்ள வேண்டாம். அன்றைய பாடங்களை அன்றே படித்துவிடுவது நல்லது. விளையாட்டுப் போட்டிகளிலும் வெற்றிவாகை சூடுவீர்கள்.
கலைஞர்களே! கிசுகிசுக்கள், வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். என்றாலும் மூத்த கலைஞர்களைப் பற்றி விமர்சித்துப் பேசவேண்டாம். உங்கள் படைப்புகளை அனைவரும் பாராட்டுவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, நாலாவிதத்திலும் உங்களுக்கு அனுபவ அறிவைத் தருவதுடன், உங்களின் வாழ்வில் படிப்படியாக முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

ழைய வாழ்க்கையை மறக்காதவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு லாப வீட்டுக்குள் நீடிப்பதால், தொட்டது துலங்கும். உற்சாகம் கூடும். வெளிச்சத்துக்கு வருவீர்கள். பழைய கடன் பிரச்னைகள் தீரும். வருமானம் உயரும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீட்டில் சந்தோஷம் பெருகும்.
கணவன்-மனைவிக்கு இடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். சகோதரியின் தடைப் பட்டிருந்த திருமணம் சிறப்பாக நடந்தேறும். ஷேர் மூலம் பணம் வரும். தங்க நகைகள் சேரும். உங்களை அலட்சியப்படுத்திய உறவினர்கள், இனி வலிய வந்து உறவாடுவார்கள். கல்யாணம் முதலான சுப காரியங்களில் முதல் மரியாதை கிடைக்கும்.
உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் இளைய சகோதர வகையில் மகிழ்ச்சி உண்டு. கடினமான வேலைகளையும் மிக எளிதாகச் செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் பணம் வந்து சேரும். அடகிலிருக்கும் பொருட்களை மீட்பீர்கள். அடிமனதில் இருந்த பய உணர்வு நீங்கும்.
பணப் பற்றாக்குறை காரணமாக தடைப்பட்டுப் போன வீடு கட்டும் பணிகளை, முழுமையாக முடிப்பதற்கு வங்கிக் கடனுதவி கிடைக்கும். வி.ஐ.பி-கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளிவட்டாரத்தில், இதுவரை உங்களை தாழ்த்திப் பேசியவர்களும் இனி உங்கள் புகழ் பாடுவார்கள். குரு 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். தடைப்பட்டிருந்த பிள்ளைகளின் திருமணம் இனிதே நடந்தேறும். குரு உங்களின் 7-ஆம் வீட்டைப் பார்ப்பதால் மனைவி மற்றும் மனைவிவழி உறவுகளுடனான மனஸ்தாபம் நீங்கும். பூர்வீகச் சொத்துப் பிரச்னைகளில், நல்ல தீர்வு கிடைக்கும். கூட்டாக தொழில் தொடங்கும் வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் இழந்த
செல்வாக்கை மீண்டும் பெறுவர்; தலைமை, உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், பணபலம் உயரும். புதியவர்களின் நட்பால் வாழ்க்கையில் திடீர் மாற்றம் உண்டாகும்.
22.7.2011 - 10.10.2011 வரையிலும்;  2.3.2012 - 1.5.2012 வரையிலும் உங்கள் பூர்வ புண்ணியாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், குழந்தை பாக்கியம் கிடைக்கும். பூர்வீகச் சொத்து சிக்கல்கள் தீரும். வழக்கில் வெற்றி உண்டு.
2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். செல்வாக்கு கூடும். சகோதர வகையில் நன்மைகள் உண்டு.
வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். தேங்கிய சரக்குகளும் விற்றுத் தீரும். அனுபவசாலிகளை வேலைக்கு அமர்த்து
வீர்கள். மே, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பாக்கிகள் வசூலாகும். புது சலுகைகளை அறிவிப்பீர்கள். மருந்து, உணவு, கமிஷன் மற்றும் இரும்பு வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்களிடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.
உத்தியோகத்தில், இழந்துபோன சலுகை களையும் மதிப்பையும் மீண்டும் பெறுவீர்கள். வேலை குறையும். தலைமைப் பொறுப்புகள் தேடி வரும். உங்களை மனச் சங்கடப்படுத்திய மேலதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படுவார். பதவி- சம்பள உயர்வுகள் ஜூன், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கிடைக்கும். கணினித் துறையினருக்கு வெளிநாட்டு நிறுவனங் களிலிருந்து, அழைப்பு வரும்.
கன்னிப் பெண்களுக்கு, மனதுக்கினிய கணவன் வாய்ப்பார். தடைப்பட்ட கல்வியில் வெற்றியுண்டு. மாணவர்களுக்கு, படிப்பிலிருந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் உயர்கல்வி தொடர இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு - பாராட்டு உண்டு. கலைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். அவர்களைப் பற்றிய கிசுகிசுக்களும் வீண் வதந்திகளும் ஓயும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, அணைக்கட்டிலிருந்து வெளியேறும் நீரைப் போல, உங்களை விரைவாக செயல்பட வைத்து, வெற்றிகள் பலவற்றை அள்ளித் தருவதாக அமையும்.


ளகிய மனம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரையிலும் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால், எதிலும் இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங் களை தவிர்ப்பது நல்லது. எனினும் உங்கள் ராசிக்கு 2-ஆம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால், பேச்சாலேயே பல காரியங் களைச் சாதிப்பீர்கள்.
வர வேண்டிய பணம் வந்துசேரும். சொத்துப் பிரச்னைகளில் நல்ல தீர்வு ஏற்படும். குடும்பத்தில் நிம்மதி பெருகும்.  உங்கள் ராசிக்கு 4-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், உங்கள் தாயாரின் வருத்த புலம்பல்கள் இனி இருக்காது. அவருடைய உடல்நலன் மேம்படும். தாய்மாமன் வகையிலும் மனக்கசப்புகள் தீரும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். வசதியான வீட்டுக்கு குடிபெயர்வீர்கள். சிலருக்கு வீட்டு லோன் கிடைக்கும். 6-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை அடைக்க வழி பிறக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவி கிடைக்கும்.
அரசியல்வாதிகளுக்கு, சிறு சிறு குழப்பங்கள், டென்ஷன் வந்துபோகும். தலைமையின் பார்வை உங்கள் மீது விழும்.  எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். வீண்பழி, மன உளைச்சல் வரக்கூடும். சேமிப்புகள் கரையக்கூடும்.
பிள்ளைகளின் பொறுப்பில்லாத தன்மையை நினைத்து வருந்துவீர்கள். அவர்களது போக்கிலேயே சென்று, திருத்தப் பாருங்கள். அவர்களது உயர்கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். சில நேரங்களில் ஒத்துழைப்பு தரும் சகோதரர்கள், பல தருணங்களில் தொந்தரவு தருவார்கள். உங்களுடைய புகழைக் கெடுக்க சிலர் முயற்சிப்பார்கள். வதந்திகள், விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும்  குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், திடீர் செலவுகள் அதிகரிக்கும்; பணவரவும் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.
22.7.2011 - 10.10.2011 வரையிலும்; 2.3.2012 - 1.5.2012 வரையிலும் குரு பகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. மறைமுக எதிரிகளைக் கண்டறிவீர்கள். சொத்து வாங்குவதிலும் விற்பதிலும் கவனம் தேவை.
2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால், கைமாற்று கடனை அடைப்பிர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்குக் கூடும்.
வியாபாரத்தில் போட்டியாளர்களைச் சமாளிக்க, விளம்பர யுக்திகளைக் கையாளுங் கள். சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது அவசியம். முடிவெடுப்பதில் புதியவர்களின் ஆலோசனையை ஏற்க வேண்டாம். கமிஷன், கெமிக்கல், எலெக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் ஆதாயம் உண்டு. இதுவரை பிடிவாதம் பிடித்துக் கொண்டிருந்த பங்குதாரர்கள், இனி உங்களுக்குப் பணிவார்கள். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும்.
உத்தியோகத்தில், சிறு சிறு அவமானங்கள், இடமாற்றங்களைச் சந்திக்க நேரிடும். வேலை அதிகரிக்கும். மேலதிகாரியால் அலைக்கழிக் கப்படுவீர்கள். வீணாக விடுப்பு எடுப்பதைத் தவிருங்கள். சக ஊழியர்களால் சில இன்னல் கள் வரத்தான் செய்யும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் பதவி- சம்பள உயர்வு உண்டு. கணினித் துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப் பெண்கள், புதிய நட்பால் சில பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும். தூக்கமின்மை, ஹார்மோன் கோளாறுகள் வரக்கூடும். அயல்நாடு சென்று உயர்கல்வி பெற உதவிகள் கிடைக்கும். மாணவர்கள், படிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும். கலைஞர்கள், விமர்சனங்களையும் தாண்டி பெரிதும் முன்னேறுவார்கள். கடுமையான போராட்டத்துடன் தங்களின் படைப்புகளை வெளியிடுவார்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வேலைச்சுமையையும், இழப்புகளையும் தந்தாலும் செயற்கரிய செயல்களையும் செய்ய வைத்து புகழ் சேர்ப்பதாக அமையும்.


வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல், பாக்கிய வீடான 9-ஆம் வீட்டில் நுழைவதால், வாழ்வில் புது வியூகங்கள் அமைத்து முன்னேறுவீர்கள். எந்த வேலை ஆனாலும் எளிதில் முடியும். குடும்பத்தில் நிலவிய கூச்சல்- குழப்பங்கள் முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். தடைப்பட்டிருந்த சுப காரியங்கள் கூடிவரும். வீடு களை கட்டும்.
கையில் நாலுகாசு தங்கும். வருங்காலத்துக் காக சேமிப்பீர்கள். குடும்ப விசேஷங்களில்  முன்னிலை பெறுவீர்கள். முதல் மரியாதை கிடைக்கும். வங்கியில் அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். வீடு- மனை வாங்குவீர்கள். சிலர், தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடிப்பீர்கள்.
குரு பகவான் உங்கள் ராசியைப் பார்ப்பதால், உற்சாகம் பிறக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வட்டிக் கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். எந்தக் காரியத்திலும் உங்களின் முதல் முயற்சியே வெற்றி பெறும். குரு உங்களின் 3-ஆம் வீட்டைப் பார்ப்பதால், இளைய சகோதர வகையில் மனத்தாங்கல்கள் நீங்கும். ஆபரணங்கள் சேரும்; வாகன வசதி பெருகும்.  வெகு நாட்களாக தடைப்பட்டிருந்த குலதெய்வ பிரார்த்தனையை செய்துமுடிப்பீர்கள். ஆன்மிக வாதிகள், சித்தர்களின் சந்திப்பு உண்டு.
குரு உங்களின் 5-ஆம் வீட்டைப் பார்ப்பதால், குழந்தை பாக்கியம் உண்டாகும்.
மகனுக்கு அயல்நாட்டில் படிக்கும் வாய்ப்பு, வேலை கிடைக்கும். கல்யாணம் சிறப்பாக முடியும். பழைய சொந்தங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள், விமர்சனங்களைத் தவிர்க்கவும். தலைமையின் சொந்த விஷயங் களில் தலையிடும் அளவுக்கு அவர்களுடன் நெருக்கமாவீர்கள். வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்களால் பயனடைவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் மக நட்சத்திரக்காரர் களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல்நலக் குறைவு வந்து நீங்கும். பண வரவும் உண்டு. கௌரவப் பதவிகள் தேடி வரும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், மக நட்சத்திரக்காரர்களுக்கு பண வரவு; எதிலும் வெற்றியுண்டு. கடன் பிரச்னை ஓயும்; திருமணம் கூடிவரும். ஆனால், பூர நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். ஆனால், முன்னேற்றம் தடைப்படாது.
2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், நிர்வாகத்திறமை கூடும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும். 
வியாபாரத்தில், மந்தநிலை மாறும். பெரிய முதலீடுகளால் போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். அனுபவசாலிகளை பணியில் அமர்த்துவீர்கள். உங்களின் நிறுவனங்கள், வியாபார ஸ்தலங்களை நவீனப்படுத்துவீர்கள். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பழைய
சரக்குகள் விற்றுத் தீரும். எலெக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ் மற்றும் கட்டட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்துமோதல்கள் நீங்கும்.
உத்தியோகத்தில், திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சிலருக்கு வேறு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். கணினித் துறையின ருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.
கன்னிப் பெண்களுக்கு, மே, ஜூன் மாதங்களில் திருமணம் கூடிவரும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். மாணவர்கள், அதிக மதிப்பெண்ணுடன் உயர்கல்வியில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் இடம் கிடைக்கும். விளையாட்டில் பரிசு- பதக்கம் கிடைக்கும்.
கலைஞர்களே, உங்களைப் பற்றிய கிசுகிசுக்கள் ஓயும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். பழைய நிறுவனங்களில் இருந்து புதிய வாய்ப்புகள் வரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தருவதாகவும் அமையும்.


சுயநலம் இல்லாதவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் உங்கள் ராசிக்கு 8- வது வீட்டில் சென்று மறைகிறார். 8-ல் நிற்கும் குருவால் எல்லாம் தட்டிக்கொண்டே போகுமே, இருப்பதை எல்லாம் இழக்க நேரிடுமே, என்று கலங்காதீர்கள். உபய ராசியில் பிறந்த உங்களுக்கு, குரு பாதகாதிபதியாவார். அப்படிப்பட்டவர் 8-ல் மறைவதால், கெடுபலன் குறைந்து நல்லதே நடக்கும்.
உங்கள் ராசிநாதனான புதனுக்கு பகை வரான குரு 8-ல் மறைவதால், தம்பதிக்கு இடையே சந்தோஷம் பெருகும். பிரிந்தவரும் ஒன்றுசேர்வர். ஆனாலும் ஒருவித வீண் பயமும், மனக்கலக்கமும் இருக்கும். சில விஷயங்களை அதிகச் செலவுடன் முடிக்க வேண்டியது வரும். முக்கியப் பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கவேண்டாம். எவ்வளவு பணம் வந்தாலும், செலவுகளும் துரத்தும். கௌரவப் செலவுகளை குறைத்துக்கொள்வது நல்லது.
குரு பகவான் உங்களது 2-ஆம் வீட்டை பார்ப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். மனைவிவழி உறவினர்களால் இருந்து வந்த சங்கடங்கள் தீரும். வீட்டுக்குத் தேவையான  பொருட்களைத் தடையின்றி வாங்குவீர்கள். பழுதான மின்னணு- மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். தூக்கம் இல்லாமல் தவித்த நிலை மாறும். குரு உங்கள் சுக ஸ்தானத்தைப் பார்ப்பதால் உடல் சோர்வு, வீண் டென்ஷன் விலகும். அம்மா வழி சொத்து கைக்கு வரும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள்.
குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பாதியில் நின்றுபோன வேலைகள் நிறைவு பெறும். இழுபறியான வழக்குகள் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், பேச்சை விடுத்து செயலில் இறங்குவது சிறப்பு. தலைமையின் பார்வை உங்கள் மேல் விழும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 முதல் 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அலைச்சல் இருந்தாலும் முன்னேற் றமும் உண்டு. சிறுசிறு விபத்துகள், பொருள் இழப்புகள் வந்து நீங்கும். ஆனால் பண வரவு குறையாது. அரசால் ஆதாயம் உண்டு.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் தன பாக்கியாதி பதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், இந்த காலகட்டத்தில் திடீர் வெற்றி, வாகனம்- ஆடை-ஆபரணச் சேர்க்கை உண்டு. வீடு வாங்கும் நிலை ஏற்படும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், அரசு விஷயங்களில் கவனம் தேவை.
வியாபாரத்தில் பழைய பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிக்கவும். கடையை வேறு இடத்துக்கு மாற்றுவீர்கள். விளம்பர யுக்திகளால், வாடிக்கையாளர்களைக் கவர்வீர்கள்.
அரசுக்குச் செலுத்த வேண்டிய வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். பங்குதாரர் களுடனான பிரச்னைகள் நீங்கும். ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
உத்தியோகத்தில், உங்களது திறமையும் பணியும் அங்கீகரிக்கப்படும். எதிர்பார்த்த பதவி- ஊதிய உயர்வு தேடிவரும். டிசம்பர், ஜனவரி மாதங்களில் புது சலுகைகள் கிடைக்கும். மேலதிகாரிகளின் அந்தரங்க விஷயங்களை, சக ஊழியர்களிடம் விமர்சிக்க வேண்டாம். புது வேலைக்கு மாறும்போது, யோசித்துச் செயல்படுங்கள். கணினித் துறையினருக்கு வேலைப்பளு அதிகரிக்கத்தான் செய்யும். புது சலுகைகளும் கிடைக்கும்.
கன்னிப் பெண்கள், உயர்கல்வியில் அக்கறை காட்டுவது நல்லது. பெற்றோரின் ஆலோசனையைப் புறந்தள்ளாதீர்கள். நீங்கள் எதிர்பார்த்த நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வருட மத்தியில் திருமண வாய்ப்பு கூடிவரும்.
மாணவர்கள், வகுப்பறையில் வீண் பேச்சுகளைத் தவிர்த்து, பாடத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக கணிதம், அறிவியல் பாடங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்ளுங்கள். கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி உண்டு.
கலைஞர்களுக்கு ஒருபுறம் விமர்சனம் இருந்தாலும், மற்றொரு புறம் உங்களின் திறமையால் சாதனை நிகழ்த்துவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, கடனையும், அதேநேரம் சொத்து சேர்க்கை யையும், அலைச்சலையும், கூடவே ஆதாயத்தையும் தருவதாக அமையும்.


புதுமையான சிந்தனை படைத்தவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை ஏழாம் வீட்டில் நிற்பதால் மனதில் தெளிவு பிறக்கும்.
குரு உங்கள் ராசியை நேருக்குநேர் பார்ப்பதால், குடும்பத்தவர் உங்களின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்க மாட்டார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வீண் சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்- மனைவி ஒன்றுசேர்வர். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். சிலருக்கு, தடைப்பட்ட திருமணம் நல்லவிதமாக கூடிவரும். பிள்ளைகளால் பெருமை உண்டு; மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். வங்கிக் கடனுதவியுடன் சொந்த வீடு கனவு நனவாகும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
உங்கள் ராசிக்கு 3 மற்றும் 6-க்கு உரியவரான குரு பகவான் 7-ஆம் வீட்டில் நுழைவதால் மனைவிக்கு மருத்துவச் செலவு, சில நேரங்களில் சண்டை - சச்சரவு, மனைவிவழி உறவினர்களுடன் பகை வரக்கூடும். உங்கள் ராசிக்கு 3-ஆம் வீட்டை குரு பகவான் பார்ப்பதால் பதவி - பட்டம் பெறுவீர்கள். இளைய சகோதரரால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்துகளை மாற்றி அமைப்பீர்கள். புதிய சொத்துகளும் சேரும். வழக்குகள் சாதகம் ஆகும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். மூத்த சகோதரர் பாசமாக இருப்பார். தங்க ஆபரணம் வாங்குவீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்கள் உதவுவர். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். உங்கள் மீது எதிர்க்கட்சிக்காரர்கள் சுமர்த்திய வீண் பழிகள் விலகும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு, அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில், இழுபறியான வேலைகள் உடனே முடிவடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிரபலங்கள் உதவுவர். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். செலவும் கையைக் கடிக்கும். எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்துப் போட வேண்டாம். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
22.7.2011 முதல் 10.10.2011 வரை மற்றும் 2.3.2012 முதல் 1.5.2012 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால் எதிலும் வெற்றி, பண வரவு உண்டு. ஒரு சொத்தை விற்று மற்றொரு சொத்தில் முதலீடு செய்வீர்கள். மகளுக்கு திருமணம் கூடி வரும்.
2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு, கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் எவருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். அரசுக்குச் செலுத்தவேண்டிய வரிகளை உரிய நேரத்தில் செலுத்தப் பாருங்கள்.
வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி, மார்ச் மாதங்களில் வியாபாரத்தை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர்.
ரியல் எஸ்டேட், உணவு விடுதி, வாகன உதிரி பாகங்களால் லாபம் அடைவீர்கள் கூட்டுத்தொழிலில் பிரச்னைகள் ஓயும். அரசால் அனுகூலம் உண்டு. புதிய ஏஜென்ஸி எடுப்பீர்கள்.
உத்தியோகத்தில், நல்ல பெயர் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். செப்டம்பர், ஜனவரி, மார்ச் மாதத்தில் எதிர்பார்த்த பதவி- சம்பள உயர்வு கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து நல்ல வாய்ப்புகளும் தேடிவரும். கணினித் துறையினர் இழந்த சலுகையை மீண்டும் பெறுவார்கள்.
கன்னிப் பெண்களுக்கு, கல்யாணம் கைகூடும். மாதவிடாய்க் கோளாறு விலகி ஆரோக்கியம் கூடும். மாணவர்களுக்கு சோம்பல் விலகும். நினைவாற்றல் பெருகும். சந்தேகங் களை உடனுக்குடன் ஆசிரியரிடம் தயக்கம் இல்லாமல் கேட்டுத் தெளிவு பெறுங்கள். தேர்வில் அதிக மதிப்பெண் கிட்டும்.
கலைஞர்களுக்குத் திறமைகளை வெளிப் படுத்த வாய்ப்புகள் கிடைக்கும்; நல்ல நிறுவனங்களில் இருந்து அழைப்பு வரும். அரசால் கௌரவிக்கப்படுவீர்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய கோணங்களில் உங்களை யோசிக்க வைப்பதுடன், வளர்ச்சியையும் முன்னேற்றத்தை யும் அள்ளித் தருவதாக அமையும்.


நியாயத்தைத் தட்டிக்கேட்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை, 6-வது வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார். 'சத்ய மாமுனி ஆறிலே இருகாலிலே தளைப்பூண்டதும்' என்று பழைய பாடல் கூறுகிறது. அதன்படி, எல்லா விஷயங்களிலும் சிறு சிறு தடைகள் இருக்கும்.
சொன்ன சொல்லை நிறைவேற்ற போராட வேண்டி வரும். சகட குருவாக இருப்பதால் கணவன்- மனைவிக்குள் பிரிவு, வீண் சண்டை சச்சரவுகள், உடல்நலக்குறைவு என வரக்கூடும். உறவுகளால் சேமிப்பு கரைவதுடன் மன உளைச்சலும் அதிகரிக்கும்.
எனினும், குரு பகவான் குடும்ப ஸ்தானமான 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால், பேச்சில் நிதானம் பிறக்கும். வராமலிருந்த பணம் கைக்கு வரும். வழக்கில் வெற்றி உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். எனினும், அவ்வப்போது ஆரோக்கியமான விவாதங்களும் எழும்.
குரு 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் வேலை இல்லாதவர்களுக்கு, நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். கௌரவப் பதவிகள் தேடி வரும். சொந்த ஊரில் செல்வாக்கு கூடும். அரசு அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு வேலைகள் உடனே முடியும்.
குரு 12-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயமுண்டு. மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் கூடிவரும்; வி.ஐ.பி-களின் முன்னிலையில் திருமணத்தைச் சிறப்பாக நடத்துவீர்கள். கட்டடப் பணிகளும் முழுமை அடையும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். சகாக்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அக்கம்பக்கத்தாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரையிலும்; 11.10.2011 - 1.3.2012 வரையிலும் குரு அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த காலகட்டத்தில் அனுஷ நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், செலவும் வந்து போகும். ஆனால் விசாகம் 4-ஆம் பாதம், கேட்டை நட்சத்திரக்காரர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டு. தடைப்பட்ட காரியங்கள் முடிவடையும்.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்கிறார். இந்த காலக்கட்டத்தில் தள்ளிப் போன திருமணம் முடியும். கைமாற்றாக வாங்கிய கடனை அடைப்பீர்கள். மனைவிவழி உறவுகளுடன் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வந்து போகும். மனைவிக்கு அறுவை சிகிச்சை வந்து நீங்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை, குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் எதிர்பாராத பண வரவு, செல்வாக்கு, நாடாளுபவர்களின் நட்பு யாவும் உண்டாகும்.
வியாபாரத்தில், போட்டியாளர்களை சமாளிக்கப் போராட வேண்டியது வரும். அதிரடி முடிவுகள் வேண்டாம். பணியாட்களின் மீது அதிருப்தி உண்டாகும். பாக்கிகளை அலைந்து வசூலிப்பீர்கள். உங்களின் கனிவான பேச்சால் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பர். அக்டோபர், பிப்ரவரி மாதங்களில் ஆதாயம் அதிகரிக்கும். இரும்பு, பெட்ரோ-கெமிக்கல், மருந்து, ரியல் எஸ்டேட் வகைகளால் ஆதாயம் உண்டு. தெரியாத துறையில் இறங்க வேண்டாம். பங்குதாரர்களிடம் கோபம் வேண்டாம்.
உத்தியோகத்தில் வேலை அதிகரிக்கும். மேலதிகாரியுடன் மனஸ்தாபங்கள் வெடிக்கும். அடிக்கடி விடுப்பு எடுக்க நேரிடும். திடீர் இடமாற்றமும் உண்டு. செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அலுவலகத்தில் சுமுக மான சூழ்நிலை உருவாகும். கணினித் துறை யினருக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.
கன்னிப் பெண்கள், பெற்றோரின் ஆலோசனை இல்லாமல் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். நினைவுத் திறனை வளர்க்க, உணவில் கீரை வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள். கலைஞர்கள், இழந்த புகழை மீண்டும் பெறுவதற்கு, யதார்த்தமான படைப்புகளைக் கொடுங்கள். அரசு பாராட்டும்; வெளிநாட்டு நிறுவனங்களும் வாய்ப்பு தரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, புதிய படிப்பினைகளைத் தருவதுடன், சாதுரியமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியத்தையும் புரியவைப்பதாக அமையும்.

ல்ல கருத்துகள் எங்கிருந்து வந்தாலும் ஏற்றுக்கொள்பவர் நீங்கள். உங்களுக்கு குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை 5-ஆம் வீட்டில் அமர்ந்து அள்ளிக்கொடுக்கப் போகிறார்!
வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிள்ளை இல்லாமல் ஏங்கித் தவித்த தம்பதிக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். தாயாரின் மூட்டுவலி, சர்க்கரை நோயின் தாக்கம் குறையும். விலகிச் சென்ற நண்பர்களும் உறவினரும் வலியவந்து உறவாடுவர். குலதெய்வ நேர்த்திக்கடனை செய்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்து பிரச்னைகள் தீரும். தனிமையில் தவித்த நிலை மாறும்.
குரு உங்கள் ராசியைப் பார்ப்பதால், மனதில் நிம்மதி பெருகும்; வாடிய முகம் மலரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை விலகும். மனைவிக்கு விலையுயர்ந்த ஆடை- ஆபரணங்கள் வாங்கித் தருவீர்கள். பழைய கடனை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். சிலர், சொந்தமாக வீட்டுக்கு குடிபுகுவர். குரு பகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால், தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். அவர்வழி சொந்தங்களால் ஆதாயம் உண்டு. அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். நாடாளுவோரின் நட்பால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
உங்களின் 11-வது வீட்டை குரு பார்ப்ப தால் மூத்த சகோதர- சகோதரிகளுடனான பனிப்போர் விலகும். வழக்கில் சாதகமான நிலை ஏற்படும். வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு, பெரிய நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வீட்டுக்கு வேண்டிய மின்சாதனப் பொருட்களை வாங்குவீர்கள். அரசியல்வாதிகள் இழந்த பதவியை மீண்டும் பெறுவர். அண்டைஅயலாருடன் இருந்து வந்த கருத்துவேறுபாடுகள் மறையும்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால், இந்த கால கட்டத்தில் மூல நட்சத்திரக்காரர்களுக்கு சிறிது அலைச்சலும் ஏமாற்றங்களும் இருக்கும். ஆனால், எதிர்பார்த்த காரியங்கள் தடையின்றி முடியும். சொத்து வாங்க வங்கிக் கடன் கிடைக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், இந்த காலகட்டத்தில் புதியவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். குடும்ப அந்தரங்க விஷயங்களை பகிர்ந்துகொள்ள வேண்டாம். ஆனாலும் சவாலான காரியங்களும் எளிதில் முடியும். வீடு மாறுவீர்கள். 2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான், உங்கள் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் வேலை கிடைக்கும். அரசால் ஆதாயம் அடைவீர்கள். திடீர் பண வரவு, வழக்கில் வெற்றி உண்டு. தந்தை வழி சொத்து சேரும்.
வியாபாரத்தில், போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். கடையை விரிவுபடுத்துவீர்கள். ஜூன், ஜூலை மாதங்களில் புதிய முதலீடுகள் செய்வீர்கள். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். ஹோட்டல், கமிஷன், என்டர்பிரைஸ், துணி வகைகளால் லாபம் அடைவீர்கள். பங்குதாரர்கள் ஒத்துழைப்பர். வியாபாரிகள் சங்கத்தில் பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள்.
உத்தியோகத்தில், பணி சிறக்கும்; அலுவலகத்தில் உங்கள் கை ஓங்கும். குறை கூறிக்கொண்டிருந்த சக ஊழியர்களும், இனி உங்களைப் போற்றுவார்கள். வேலைப்பளு குறையும். மேலதிகாரியுடன் பனிப்போர் விலகும்.
ஜூன், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பதவி உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.
கன்னிப் பெண்களுக்கு, தடைகள் நீங்கி கல்யாணம் நடக்கும். நல்ல வேலையும் கிடைக்கும். மாணவர்கள், கடினமான பாடங் களிலும் அதிக மதிப்பெண் பெறுவீர்கள். கலைஞர்களின் திறமை வெளிப்படும். ஆட்சி யாளர்கள் கரங்களால் பரிசு கிடைக்கும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, எதிலும் நாட்டமில்லாமல் இருந்த உங்களை, எல்லாவற்றிலும் சாதிக்கவைப்பதாக அமையும்.


நிர்வாகத்திறமை மிகுந்தவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை, 4-வது வீட்டில் அமர்கிறார். விழிப்புடன் செயலாற்ற வேண்டியது அவசியம். சேமிப்புகள் கரையும். உறவினர்களின் விமர்சனங்களை மனதில் கொண்டு மனைவி-மக்களை பகைக்க வேண்டாம்.
உங்களின் கோபதாபங்களை, கூடாபழக்க வழக்கங்களை மனைவி சுட்டிக்காட்டினாலும் ஏற்றுக்கொள்ளுங்கள். விரக்தி, சோர்வு, டென்ஷன் அதிகரிக்கும். எனினும் திடமான சிந்தையுடன் செயல்பட்டு, சாதிப்பீர்கள்.
அம்மாவுக்கு மருத்துவச் செலவுகள் வந்து போகும். நீண்ட தூர, இரவு நேர பயணங்களைத் தவிருங்கள். வாகன விபத்துகள் நேரலாம். நண்பர்கள் உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாகக் கையாளுங்கள். சொத்து வழக்குகளிலும் கவனம் தேவை.
மகளுக்கு கல்யாணம் திடீரென ஏற்பாடாகும். மகனின் கூடாபழக்கவழக்கங்கள் நீங்கும். 4.11.11 முதல் உங்கள் ராசிக்கு 8-ல் செவ்வாய் மறைவதால் சகோதரர்களுடன் மனத்தாங்கல், சிறுசிறு விபத்துகள் வந்து நீங்கும்.
அதேநேரம் குரு பகவான், உங்கள் ராசிக்கு 8-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பல்வேறு இடங்களில் இருந்தும் உதவி கிடைக்கும். பிள்ளைகளை அன்புடன் நடத்துங்கள்; அவர்களின் உடல்நலனில் கவனம் தேவை.உயர் கல்வி- உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களைப் பிரியலாம். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. சொத்து வாங்குவது- விற்பதில் கவனம் தேவை.
உங்களின் 10-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களைச் சந்திப்பீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். பிரச்னைகளுக்கு நீதிமன்றம் வரை போகாமல், பேசித் தீர்க்கப் பாருங்கள். உங்கள் ராசிக்கு 12-ஆம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகக் காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி எவரையும் விமர்சிக்க வேண்டாம்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் அலைச்சலும் செலவும் இருக்கும். பழைய நண்பர்களை பகைக்கவேண்டாம். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வதால், எதிர்பாராத பண வரவு, திடீர் யோகம் உண்டு. காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தடைப்பட்ட திருமணம் நடந்தேறும். வீடு கட்டும் பாக்கியமும் உண்டு. சிலருக்கு புது வேலை கிடைக்கும். 2.5.2012 முதல் 16.5.2012 வரை, குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும்.
வியாபாரத்தில் பெரிய முதலீடுகள் வேண்டாம். பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். வாடிக்கையாளர்களை அதிகப் படுத்த புதிய அணுகுமுறைகள் நல்லது. உணவு, கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயம் உண்டு. பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லுங்கள்.
உத்தியோகத்தில், பல்வேறு வேலைகளை நீங்களே பார்க்கவேண்டி வரும். மூத்த அதிகாரி உங்களை பாராட்டுவார். பதவி- சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். அயல்நாட்டு தொடர்புள்ள நிறுவனங்களில் இருந்து  அழைப்பு வரும். குரு பகவான் 10-ஆம் வீட்டைப் பார்ப்பதால் சவால்களைச் சமாளிப்பீர்கள். கணினித் துறையினருக்கும் வேலைச்சுமை அதிகரிக்கவே செய்யும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கினிய கணவன் வாய்ப்பார். மாணவர்கள் கணிதம், அறிவியல் பாடங்களில் அதிகக் கவனம் செலுத்துங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, வேலைச் சுமையையும், மன உளைச்சலையும் தந்தாலும் பல்வேறு வகையிலும் முன்னேற்றம் தந்து, வாழ்வில் வெற்றிபெற வைப்பதாக அமையும்.

மைதியாக சாதிப்பவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை 3-வது வீட்டிலேயே நீடிக்க உள்ளதால், உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள் வது நல்லது. சில விஷயங்களில் சந்தர்ப்பச் சூழ்நிலை அறிந்து முடிவெடுங்கள்.
காரியத் தடைகள், டென்ஷன் வரக்கூடும். வசதி, செல்வாக்கைக் கண்டு மயங்கி தவறானவர்களைப் பின்பற்ற வேண்டாம். பெரியவர்களிடம் முக்கிய விஷயங்களை கலந்தாலோசிப்பது நல்லது. இளைய சகோ தரருடன் உரசல் போக்கு வந்து நீங்கும்.
எனினும், உங்களின் 7-ஆம் வீட்டை குரு பார்ப்பதால், மறைந்திருந்த திறமைகள் வெளிப்படும். வி.ஐ.பி-கள் அறிமுகமாவர். கணவன்- மனைவிக்குள் சச்சரவுகள் வந்தாலும், அந்நியோன்யம் குறையாது. குரு பகவான் உங்களின் 9-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். தந்தையாருடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும்.
அவர்வழிச் சொத்துக்கள் கைக்கு வந்துசேரும்.  மகன் ஆசைப்பட்ட கல்வி நிறுவனத்திலேயே படிக்க வைப்பீர்கள். மகளுக்கு அந்தஸ்துக்கு தகுந்த மணமகன் அமைவார். உறவினர்கள், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவர். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை. குரு 11-ஆம் வீட்டைப் பார்ப்பதால் காரியத்தடைகள் விலகும். சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். அரசியல்வாதி கள், மேலிடத்தை அனுசரித்துப் போங்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத் தில் பணம் வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். செலவுகளும் துரத்தும். பங்காளி பிரச்னைக்காக அவசரப்பட்டு நீதிமன்றம் செல்லவேண்டாம். முதுகு வலி, தலைவலி வந்து நீங்கும். எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். ஊர் பொதுக் காரியங்களில் மூக்கை நுழைக்கவேண்டாம்.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் குரு செல்வ தால் அரைகுறையாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். பெற்றோருடன் மனஸ்தாபங்கள் நீங்கும். வீடு மாறுவீர்கள். ஆபரணங்கள் வாங்குவீர்கள். 
2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு பகவான் கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், மனைவி வழியில் மனஸ்தாபங்கள், மருத்துவச் செலவுகள் வந்து போகும்.
வியாபாரத்தில், பெரிய முதலீடுகள் வேண்டாம். உங்கள் ரசனைக்கேற்ப கடையை விரிவு செய்வீர்கள். வாடிக்கையாளர்களும் விரும்பி வருவார்கள். ஆனால், பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வேலையாட்களிடம்  கனிவு தேவை. ஹோட்டல், விடுதிகள், வாகன உதிரி பாகங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள். ஜூன், நவம்பர் மாதங்கள் சாதகமாக இருக்கும். கூட்டுத்தொழிலில் சில பிரச்னைகள் எழலாம்.
உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் வீண் விவாதங்கள் வரும். எனினும் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். சக ஊழியர்களிடம் உஷாராக பழகுங்கள். சிலர் எதிர்பாராத இடத்துக்கு மாற்றப்படுவீர்கள். புதிய வாய்ப்புகள் வந்தால் தீர யோசித்து முடிவெடுங்கள். மே, டிசம்பர் மாதங்களில் வேலை குறையும். கணினித் துறையினருக்கு புதிய சலுகைகள் கிடைக்கும்.
கன்னிப் பெண்களின் புது முயற்சிகள் வெற்றியடையும். கெட்டவர்களை அடையாளம் கண்டு ஒதுக்கிவிடுங்கள். இரும்பு, கால்சியச் சத்து உடம்பில் குறையும். மேலைநாட்டு உணவுகளைத் தவிர்த்து, பாரம்பரிய உணவை உட்கொள்ளுங்கள். திருமணத் தடை நீங்கும்.
மாணவர்களுக்குப் படிப்பில் ஆர்வம் பிறக்கும். ஆனால் அவ்வப்போது மறதி, அலட்சியம் வந்து நீங்கும். விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் உண்டு.
கலைஞர்கள், பெரிய வாய்ப்புக்காகக் காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, உங்களைப் பல்வேறு வகைகளில் பக்குவப் படுத்துவதுடன், சில காரியங்களில் வெற்றியை யும் மகிழ்ச்சியை அளிப்பதாக அமையும்.


திட்டமிட்டு செயல்படுபவர் நீங்கள். குரு பகவான் 9.5.2011 முதல் 16.5.2012 வரை உங்கள் ராசிக்கு தன வீடான 2-ஆம் வீட்டில் அமர்வதால், அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். பணபலம் கூடும்.
குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதி உண்டாகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் தேடி வருவர். விருந்தினர் வருகை அதிகரிக்கும். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். உடன்பிறந்தவருடன் உரசல் போக்கு நீங்கும். இனி பாசமாகப் பேசுவார்கள். பெரிய நோயெல்லாம் இருப்பது போன்று பயந்தீர்களே, இனி ஆரோக்கியம் பற்றிய பயம் நீங்கும். இனிய பேச்சால் சாதிப்பீர்கள்.
குரு பகவான் ஆறாவது வீட்டைப் பார்ப்ப தால், உங்களை எதிர்த்தவர்களும் அடங்குவர். கடன் பிரச்னைகள் கட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளைக் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலைச்சல்கள் குறையும். குரு பகவான் 8-வது வீட்டைப் பார்ப்பதால், எதிர்பாராத வகையில் பணம் வரும். அயல்நாட்டுப் பயணங்கள் கூடிவரும். விசா பெறுவதில் தடையிருக்காது. 10-வது வீட்டையும் பார்ப்பதால் கௌரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பி-களுக்கு நெருக்கம் ஆவீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கம் ஆவீர்கள்.
குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
9.5.2011 - 21.7.2011 வரை; 11.10.2011 - 1.3.2012 வரை குரு பகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்கிறார். இந்த காலகட்டத்தில் உங்கள் ரசனைக்கு ஏற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வருவீர்கள். வழக்குகள் மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். உயர்கல்வியில் தேர்ச்சி உண்டு. போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.
22.7.2011 - 10.10.2011 வரை; 2.3.2012 - 1.5.2012 வரை பரணி நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.  சொத்துப் பிரச்னை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவர்.   2.5.2012 முதல் 16.5.2012 வரை குரு கார்த்திகை 1-ஆம் பாதத்தில் செல்வதால், செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பழைய வேலையாட்களை, பிரச்னை தந்த பங்குதாரர்களை மாற்றுவீர்கள். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப புதிய முதலீடுகள் செய்வது அவசியம். லாபம் கணிசமாக உயரும். தேங்கிய சரக்குகள் விற்றுத் தீரும். மே, ஜூன், ஆகஸ்டு, ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், ஃபைனான்ஸ், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபம் அடைவீர்கள்.
உத்தியோகத்தில் வேலை நிரந்தரமாகும். எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக்கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்துபோவார். பதவியுயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். கணினித் துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவர்.
கன்னிப் பெண்களுக்கு, தடைப்பட்டுக் கொண்டிருந்த திருமணம் இனி கைகூடும். பெற்றோரின் ஆதரவு உண்டு. நல்ல வேலை கிடைக்கும்.
மாணவர்கள், உயர்கல்வியில் கூடுதல் அக்கறை எடுக்காவிட்டால், பின்னர் வருத்தப்பட வேண்டியது வரும். விளையாட்டுகளில் பதக்கங்கள் வெல்வீர்கள். கலைஞர்களுக்கு, அவர்களது தனித் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் தேடி வரும். சம்பளப் பிரச்னை தீரும்.
மொத்தத்தில் இந்த குருப்பெயர்ச்சி, இடியாப்ப சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன், எதிலும் சாதிக்கும் வல்லமையைத் தருவதாக அமையும்.