Thursday, July 7, 2011

ஹாய் மதன் கேள்வி - பதில்

ஹாய் மதன் கேள்வி - பதில்

'நல்லதங்காள்' ரீ-மேக்?!

சிவராம சுப்பிரமணியன், தூத்துக்குடி-2.

சத்தம் போட்டுப் படித்தால் மனதில் பதியுமா? மௌனமாகப் படித்தால் மனதில் பதியுமா? கொஞ்சம் புரியவையுங்களேன்?

எப்படி சின்னஞ் சிறு குழந்தை பல வார்த்தைகளைப் பயன் படுத்திப் பேசுகிறது? பெற்றோர் உரக்க உபயோகிக்கும் வார்த் தை களைக் காதால் கேட்டு, அப்படியே திருப்பிச் சொல்கிறது. அந்த வார்த்தைகளை அது மறப்பதும் இல்லை. குழந்தை புத்தகம் படிப்பது எல்லாம் ரொம்பப் பிறகுதான். வேதங்கள், புராணங்கள் எல்லாம் முதலில் எழுதப்படவில்லை. உரக்க உச்சரிக்கப்பட்டன. செவி வழியாகவே பல பரம்பரைகள் கடந்து நின்றன. உரக்கப் படிக்கும்போது - பார்க்கிறோம், கூடவே கேட்கிறோம். பரீட்சைக்கு மனப்பாடம் செய்ய அதுதான் பெஸ்ட். மேல் மாடியில் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டு உரக்கப் படித்தும் நான் மார்க்குகள் வாங்காததற்குக் காரணம், எதிரே இன்னொரு மாடியில் உரக்கப் படித்தவாறு நடந்த ஒரு பெண். அவள் மட்டும் எதிர் மாடியில் படிக்காமல் இருந்திருந்தால், நான் நல்ல மதிப்பெண்கள் வாங்கி இருப்பேன்!

பக்தி விசுவாசம், மலையடிப்பட்டி.

'நல்லதங்காள்’, 'அரிச்சந்திரா’, 'துலாபாரம்’ போன்ற படங்களை ரீ-மேக் செய்தால், இப்போதைய ரசிகர்களிடையே வரவேற்பு இருக்குமா?

கருவும் கதையும் என்றும் மாறாது. சொல்கிற விதம்தான் மாறும். நவீனமான திரைக்கதையுடன் அவற்றைப் படமாக்கி னால், நிச்சயம் வரவேற்பு இருக்கும். அப்படியே எடுத்தால், இன்றைய ரசிகர்கள் கொலைவெறி அடைவார் கள்! ஜிம் கேரி நடித்த 'Liar, Liar' என்கிற படத் தில் ஹீரோ அரிச் சந்திரனாக மாற முயல்கிறான். அது காமெடி. The Pursuit of Happyness படத்தில் வில் ஸ்மித் தன் குழந்தை யோடு 'துலாபாரம்’ படத்தில் வரும் சிரமங்களை அனுபவிக்கிறார். ஸோ..?!

பெ.வேலுமணி, நாராயணபாளையம்.

கணவனுக்கு உடல்நலக் குறைபாடு என்றால் மனைவி பதறி, பரிவுடன் கவனித்துக்கொள்வதுபோல், மனைவியின் உடல் நலனில் கணவன் அக்கறை கொள்வது இல்லையே, ஏன்?

உடலுக்குள் இதயம், கல்லீரல், சிறுநீரகம்... எல்லாம் இருப்பதை நாம் உணர்கிறோமா? அதேபோல மனைவியும் கணவனுக்கு இதயத்தைப்போல... Taken for granted! திடீர் என இதயம் படபடத்தால் 'ஐயோ, என்ன ஆச்சு?’ என்று அப்போதுதான் பதறுகிறோம். இந்த விஷயத்தில் நாம் நோயாளியைப்போல! மனைவி எப்போதும் நம்மைக் கண்காணித் துக்கொண்டே கவலைப்பட்டுக்கொண்டு இருக்கிறாள் - ஒரு நல்ல டாக்டர் மாதிரி!

ஹெச்.சந்திரமௌலி, கோயம்புத்தூர்.

'நம்பர் ஒன்’ போவதை Piss என்றும், Pee என்றும் இந்தத் தலைமுறை அழைக்கிறது. இது கெட்ட வார்த்தை இல்லையே? அதாவது 'பப்ளிக்’கில் பயன்படுத்தலாமா?

Piss என்பது புது வார்த்தை இல்லை. பல நூற்றாண்டுகளாக ஆங்கிலத்தில் இருந்து வரும் சொல் அது. போகப் போக அது சற்று கூச்சம் ஏற்படுத்தும் சொல்லாக ஆகியதால், இந்தத் தலைமுறையினர் முழுசாகச் சொல்லாமல் முதல் எழுத்தை மட்டும் (P) பயன்படுத்த ஆரம்பித்தார்கள். எழுதும்போது அது Pee ஆனது. தமிழில் மட்டுமே பேசுகிறவர்கள் இதைப் பயன்படுத் தாமல் இருப்பது நலம்!



வினோத் ப்ரியன், சென்னை-82.

இனப் பெருக்கம் ஆவது ஓ.கே. நமக்கு இருப்பதுபோல் காதல், காம உணர்ச்சிகள் விலங்கு களுக்கும் பறவைகளுக்கும் அந்தச் சமயத்தில் வருமா?

காதலுக்கு ஆறறிவு வேண்டும்! காமம் காமன். அதாவது, எல்லா உயிரினங்களுக்கும் Common! அந்த உள்ளுணர்வு வந்தால், எந்த உயிரினமும் தயார் நிலைக்கு வந்து உடலுறவுக்காகத் துடிக்கும். ஆகவே, காமம் இல்லையேல் இனப் பெருக்கம் சரேல் என்று நின்று, கடைசியில் பூமி ஒரு வெறும் பெரும் பாறையாக சூரியனைச் சுற்றி வர வேண்டியதுதான்!

சி.பி.நாராயணசாமி, செக்கானூர்.

மன்னன் ஒருவருக்கு மூக்கு வழியாக தேரைக் குஞ்சு சென்று மூளையில் தங்கிவிட்டதாகவும் தேரையர் என்ற சித்தர் தண்ணீர் வைத்து அதனை வெளியேற்றியதாகவும் ஒரு செய்தி. மூக்கு வழியாக மூளைக்கு ஒரு பொருள் செல்ல முடியுமா?

மூக்கு... தேரைக் குஞ்சு... மூளை... சித்தர் பற்றி எனக்குத் தெரியாது! ஆனால், மூக்கு வழியாக மூளைக்குப் போக முடியும். ஸ்ட்ரெய்ட் ரூட்! வழியில் 'எலும்புத் தடுப்புச் சுவர்’ ஒன்றும் கிடையாது. பண்டைய எகிப்தியர்கள், மன்னர்களின் உடலைப் பதப்படுத்தி மம்மி (Mummy) தயாரிக்கும்போது, நீண்ட குழலை மூக்கினுள் செலுத்தி, மூளையை உறிஞ்சி மூக்கு வழியாகத்தான் எடுத்தார்கள். ரொம்ப உறிஞ்சினால் வாய்க் குள் மூளை போய்விடும். 'கெமிஸ்ட்ரி லேப்’பில் பயன்படுத்தப்படும் 'பிப்பெட்’ (Pipette) போலக் கச்சிதமாக உறிஞ்ச வேண்டும்!

No comments:

Post a Comment