Sunday, July 3, 2011

சமையல் குறிப்பு

காபி, டீ சுவையாக இருக்க...

காபி, டீ தயாரிக்கும் போது, தண்ணீர் ஒரு கொதி வந்ததும் அதை இறக்கிவிட வேண்டும். தண்ணீரை அதிகமாகக் கொதிக்க வைத்தால் அதில் இருக்கும் பிராண வாயு போய்விடும். தண்ணீரின் சுவை மாறிவிடும். இதனால் காபியோ, டீயோ சுவையாக இருக்காது.

கறிவேப்பிலை சேர்க்கும்போது...

சாம்பார், ரசம் இவற்றில் போடும் கறிவேப்பிலை அனேகமாக யாரும் சாப்பிடுவதில்லை, வீணாகித்தான் போகிறது. இதை தவிர்க்க கறிவேப்பிலையை விழுதாய் அரைத்துக் கலந்து விட்டால் வயிற்றுக்குச் சேரும். கொத்துமல்லியையும் இப்படியே செய்யலாம்.

காய்கறி சத்து வீணாகாமல் இருக்க...

காய்கறிகளை நிறைய நீர் வைத்து வேக விடாதீர்கள். காய்கறிகள் வேகவும் நேரமாகும். அவற்றின் சத்துக்களும் வீணாகிவிடும். கொதித்துக் கொண்டிருக்கும் நீரில் காய்கறிகளைப் போட்டு வேகவிடலாம். அல்லது தண்ணீரைத் திட்டமாக வைத்து வேகவிடலாம்.

அப்பளம் நமத்துப் போகாமல் இருக்க...

அப்பளங்கள் பொரித்தவுடன் டப்பாக்களில் அவற்றை அப்படியே போடாமல் பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைத்தால் நமத்துப் போகாமல் இருக்கும்.

இஞ்சி நிறைய இருக்கிறதா...

இஞ்சி தேவைக்கு அதிகமாக இருந்தால் அதை மணலில் புதைத்து வைத்து நீர் விட்டு மண்ணை ஈரமாகவே வைத்திருங்கள். இஞ்சி பல நாட்கள் வரை காய்ந்து போகாமல் பச்சையாகவே இருக்கும். 

 சமைக்கும் போது கடுகு, ஏலக்காய், சீரகம், கிராம்பு போன்ற மசாலா சாமான்களை தேவைக்கேற்ப பயன்படுத்துங்கள். அதிகமாக பயன்படுத்தினால் அவற்றின் சுவைதான் கூடுதலாக தெரியும்.

உருளைக்கிழங்குகளை சமைக்கும் போது அவைகளை எவர்சில்வர் பாத்திரங்களில் சமைப்பது நல்லது அலுமினியப் பாத்திரங்களில் சமைக்கும்போது அதன் நிறம் மாறுகிறது.

கோழியை துண்டாக்குவதற்கு முன் சிறிதளவு மஞ்சள் பொடியை தடவி 10 நிமிடம் கழித்து நறுக்கினால் மாமிசத்திலிருந்து வரும் ஒரு வகை துர்நாற்றம் இருக்காது.

உலர் திராட்சையை காற்றுப்புகாவண்ணம் இறுக்கமாக மூடிய பாட்டிலில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால் நீண்ட நாட்களுக்கு வரும்.

பருப்பு வேக வைக்கும்போது சிறிதளவு எண்ணெய் சேர்த்தால் சுவையாக இருப்பதோடு புரதமும் வெளியேறாது. 

சமையலில் காரம் அதிகமாக இருந்தால் எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும். குழம்பில் உப்பு அதிகமாக இருந்தால் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சேர்க்கவும்.

ரொட்டியை போட்டு வைக்கும் டப்பாவில் நான்கு மிளகைப் போட்டு வைத்தால் ரொட்டி நமத்துப் போகாமல் இருக்கும்.

காய்களை வதக்கும் போது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால் காய்கள் சீக்கிரம் வெந்துவிடும்.

நெய்யை உருக்கிய பின்னர்தான் சாப்பிட வேண்டும். கெட்டி நெய்யாக சாப்பிட்டால் ஜீரணமாவது கடினமாக இருக்கும்.

கேசரி செய்யும் போதும் தண்ணீரின் அளவைக் குறைத்து பால் சேர்த்துக் கொண்டால் சுவை கூடுதலாக இருக்கும்.

கீரையை வேகவைக்கும் போது மூடி போட்டு வைக்கக்கூடாது. அவ்வாறு மூடி வேகவைத்தால் நிறமும் மணமும் மாறிவிடும்.

முளைக்கீரையை வேகவைக்கும் போது சிறிது சர்க்கரை சேர்த்துக்கொண்டால் ருசியாக இருக்கும்.

பச்சரியில் கல் உப்பை சேர்த்து கலந்து வைத்தால் பூச்சி வராது.

காய்கறிகளை துணிப்பைகளில் போட்டு வைத்தால் அதனுடைய நீர் சத்து குறைந்துவிடும்.

பூரி செய்ய தயாரிக்கும் மாவை உடனே பயன்படுத்திவிட வேண்டும். அதிக நேரம் கழித்து பூரி சுட்டால் அதிகமான எண்ணெயைக் குடிக்கும்.

வெந்தயத்தை வறுத்துப் பொடி செய்து வைத்துக்கொண்டு குழம்பை இறக்கும்முன் போட்டு இறக்கினால் நல்ல மணமாக இருக்கும்.

சேமியாக, ஜவ்வரிசி பாயாசம் செய்த பின்னர் அதில் ஒரு டம்ளம் வெந்நீர் ஊற்றி வைத்தால் பாயாசம் கெட்டியாகாமல் இருக்கும்.

பஜ்ஜிக்கு மாவு கரைக்கும் கடலை மாவுடன், அரிசி மாவிற்கு பதில் இட்லி மாவு சேர்த்து கரைத்து பஜ்ஜி சுடலாம். சோடா மாவு சேர்க்காமலே பஜ்ஜி மிருதுவாக இருக்கும்.

கிழங்குகளை மூடி பாத்திலத்தில் வேகவைக்க வேண்டும். காய்கறிகளை திறந்த பாத்திரத்தில் வேகவைக்க வேண்டும்.

சப்பாத்தி, பூரி செய்வதற்கு கோதுமையை அரைக்கும் போது ஒரு கிலோவிற்கு கால் கிலோ வீதம் கொண்டைக்காலையோ அல்லது சோயாவோ சேர்த்து அரைத்தால் மேலும் சத்தான மாவு கிடைக்கும். 

டீத்தூள் வைத்திருக்கும் பாட்டிலில் உபயோகித்த ஏலக்காய் தோல்களைப் போட்டு வைத்திருந்தால் டீ ஏலக்காய் மணதோடு சுவையாக இருக்கும்.

மழை, குளிர் காலங்களில் வடகம் நமத்துப் போய் நன்றாகப் பொரியாது வெறும் வானலியை அடுப்பில் வைத்து சூடேற்றி அதில் வடகத்தைப் போட்டு சற்று புரட்டி எடுத்து விட்டு எண்ணெயில் பொரித்தால் நன்றாகப் பொரியும்.

தேங்காய் சட்னி மிகவும் சுவையாக இருக்க நாம் அரைக்கும் சட்னியில் பாதி தேங்காயும், பாதி கொத்துமல்லியையும் சேர்த்து அரைத்தால் மிகவும் ருசியாக இருக்கும்.

வெங்காய ஊத்தாப்பம் செய்யும்போது தோசை இருபுறமும் வெந்து இருந்தால்தான் சுவையாக இருக்கும். தோசையின் நடுப்பகுதியில் சிறு ஓட்டை செய்து எண்ணெய் ஊற்றினால் விரைவில் வெந்தும், சுவையாகவும் இருக்கும்.

குக்கரில் துவரம் பருப்பை வேகவைக்கும் போது அதனுடன் கொஞ்சம் மேத்தி விதைகளை சேர்த்து விடுங்கள். அதனால் பருப்பு எளிதாக ஜீரணமாகும்.

வெங்காயம் அலலது பூண்டு வகைகளை சமைக்கும்போது வரும் நாற்றத்திலிருந்து வீட்டை பாதுகாக்க, அடுப்பின் அருகே சிறிதளவு வினிகரை ஒரு பாத்திரத்தில் திறந்து வைக்கவும்.

பால் பாக்கெட்டிலிருந்து பாலை ஊற்றும் போது, கடைசியாக சிறிது சுடு தண்ணீரை ஊற்றி அதை கலந்துக்கொள்ளலாம். பிறகு அந்த பாக்கெட்களை காய வைத்தப் பின்னர் அகற்றவும். இவ்வாறு செய்வதன் மூலமாக நம் உணவும் சமையலறையும் சுகாதாரமாகக் காணப்படும்.

முள்ளங்கியின் நிறம் எவ்வளவு சிகப்பாக இருக்கிறதோ அவ்வளவு வைட்டமின் ஏ சத்து இருப்பதாக அர்த்தம்.

எலுமிச்சை பழங்களை எடுத்து வெ‌ன்‌னீரில் போட்டு விடுங்கள். ஒரு இருபது நிமிடங்கள் கழித்து பிழியுங்கள். அதிகமான சாறு பிழியலாம்.

கேக் அல்லது பிஸ்கட் தயாரிக்கும் போது நாம் அவற்றின் மீது முந்திரி போன்ற பருப்பு வகைகளை தூவுவது வழக்கம். குழந்தைகள் மட்டுமல்லாது பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் இந்த பருப்புக்கள் விழுந்து விட்டால் ஏதோ இழந்தது போன்ற ஒரு கவலை ஏற்பட்டுவிடும்.

எனவே, இனிமேல் கேக் அல்லது பிஸ்கட் தயாரிக்கும் போது, முந்திரி அல்லது பிஸ்தா போன்ற பருப்புக்களை பாலில் முக்கிவிட்டு அப்புறம் தூவுங்கள். அவை விழாமல் இருக்கும்.

சீனிப் பாகு தயாரிக்கும் போது ஒரு சில சொட்டுக்கள் எழுமிச்சை சாறை சேர்த்துக் கொள்ளுங்கள். சினிப் பாகில் இருக்கும் தேவையற்ற கசடுகள் மேலே மிதக்க ஆரம்பித்துவிடும். அவற்றை இறுதியில் நீங்கள் வடிகட்டிக் கொள்ளலாம்.

பஜ்ஜி சுடுவதற்கு முன் அந்த மாவோடு கொஞ்சம் அரிசி மாவை சேர்த்துக் கொள்ளுங்கள். அதனால பஜ்ஜியும் மொருமொருப்பாக இருக்கும், எண்ணெயும் கொஞ்சமாகத்தான் செலவாகும். 

காளிபிளவரை சமைக்கும் முன் அவற்றை கொஞ்சம் கொதிக்க வைத்த உப்பு நீரில் சிறிது நேரத்திற்கு முக்கி எடுக்கவும். அதனால் அந்த பூக்களுக்குள் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறு பூச்சிகள் விலகிவிடும்.

குக்கரில் பருப்பை சமைக்கும் போது, ஒரு சிறுபிடி மஞ்சள் தூளையும், ஒரு ஸ்பூன் நிறைய நெய்யையும் அதற்குள் சேர்த்து விடுங்கள். அதிலிருந்து வரும் மனத்திற்கே, அனைவரும் ஒரு பிடி பிடித்துவிடுவார்கள்.

நன்றாக காய்ந்து போன பிரட், பன் போன்றவைகளை எடுத்து தண்ணீர் கலந்து பிசைந்து விடுங்கள். நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயம், பூண்டு போன்றவற்றுடன் கொஞ்சம் உப்பை சேர்த்து மாவாக ஆக்கி விடுங்கள்.

கொஞ்சம் எண்ணெயை சுட வைத்து இந்த கலவையை வடை சுடுவது போல் போட்டு பொன்னிறமாகும் வரை பொரித்து விடுங்கள். பஜ்ஜிகளுக்கு போட்டியாக சூப்பர் சுவையாக இருக்கும்.

சப்பாத்திக்கு மாவு உருட்டும் போது அந்த உருட்டு பலகையின் கீழ் ஒரு சமையலறை துணியை போட்டுக் கொள்ளுங்கள். இதனால் அந்த பலகை ஆடாமலும் விலகாமலும் இருக்கும், நீங்களும் வேகமாக மாவை தேய்க்கலாம்.

கொத்தமல்லியின் மெல்லிய காம்புகள் சூப் அல்லது காய்கறிகளுக்கு ருசியைக் கூட்டும்.

ஊறுகாய்களை பராமரிக்க அகலமான செராமிக் ஜாடிகளை பயன்படுத்தலாம்.

சாம்பார் அல்லது ரசம் தயாரிக்க புளி ஊற வைக்கும்போது வென்னீரில் ஊற வைத்தால் புளிச்சாறு எளிதில் எடுக்க வரும்.

பருப்பை குக்கரில் வைக்கும் முன் சிறிதளவு மஞ்சள் தூளுடன் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்தால் வாசனையாக இருக்கும்.

கேக் தயாரிக்கும்போது சேர்க்க வேண்டிய முந்திரிப்பருப்பு பாதாம் பருப்பு போன்றவைகளை பாலில் ஊற வைத்த பின்னர் சேர்த்தால் அவை கேக்கிலிருந்து தனித்தனியாக விழாது.

திராட்சையில் சாறு எடுத்தப் பின்னர் அதன் சக்கையை தூர எறிவார்கள். அவ்வாறு செய்யாமல் திராட்சை சக்கையை ஜாம் தயாரிக்க பயன்படுத்தலாம். 

சாதம் சமைக்கும் போது அரிசியோடு கொஞ்சம் எழுமிச்சை சாறை சேர்க்கவும். அதன் பின் சாதம் வெண்மையாக மாறிவிட்டதைப் பாருங்கள்.

வெங்காயத்தின் சுவை யாருக்காவது பிடிக்கவில்லையென்றால், அதற்கு பதில் முட்டைகோஸை சமையலுடன் சேர்த்துக்கொள்ளவும். இந்த சுவை கண்டிப்பாகப் பிடிக்கும்.

காரட், பட்டாணி, பீட்ரூட் மற்றும் மக்காச்சோளம் போன்றவற்றை வேகவைக்கும் போது, கொஞ்சம் சர்க்கரையை சேர்த்துக் கொள்ளுங்கள். அவற்றின் சுவை மாறாமலே இருக்கும்.

மக்காசோளத்தை வேக வைத்து அடுப்பிலிருந்து இறக்கும் முன் அந்த நீருடன், ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை சேர்த்தால், அதன் மஞ்சள் நிறம் மாறாமல் இருக்கும்.

மக்கா சோளத்தை வேகவைக்கும் போது தண்ணீரில் உப்பை சேர்த்து விடாதீர்கள். அது கடினப்படுத்திவிடும்.  

இஞ்சி, பூண்டு, சட்னி தயாரிக்க இரண்டையும் 2க்கு மூன்று என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். இஞ்சியை குறைவாக பயன்படுத்தினால் பண்டம் ருசியாக இருக்கும்.

காய்ந்த பழங்களை பராமரிக்க அதை வைத்திருக்கும் பாத்திரத்தில் 2-3 கிராம்புகளை போட்டு வைத்தால் நீண்ட நாட்களுக்கு ருசி கெடாமல் இருக்கும்.

கேக் பேக் செய்யும்போது தேவையான நேரத்திற்கு முன்பாகவே பேகிங் ஓவனைத் திறக்காதீர்கள்.

தண்ணீரில் சிறிதளவு வினீகரைச் சேர்த்தால் விரிசல் விழுந்த முட்டையைக் கூட சமைக்கலாம்.

முட்டைக்கோசை சமைக்கும்போது ஒரு துண்டு இஞ்சியையும் சேர்த்து சமைத்தால் அதன் மணம் மாறாமல் இருக்கும்.

உருளைக்கிழங்குகளை பிளாஸ்டிக் கவர்களில் போட்டு வைக்ககூடாது. ஏனெனில் அதிலுள்ள ஈரத்தன்மையால் கிழங்கு அழுகி விடும் வாய்ப்பு இருக்கிறது.
எலுமிச்சையிலிருந்து சாறை எடுக்கும் முன் அதனை சிறிது நேரம் வெந்நீரில் வைத்தால் சாறு அதிகமாக வரும்.

முட்டையை அதிக நேரம் கொதிக்க வைத்து விட்டால் உரிக்கும் முன் பச்சைத் தண்ணீரில் சிறிது நேரம் வைக்கவும்.

பாலில் தயாரிக்கும் உணவுகளுடன் பழச் சாற்றை சேர்க்க வேண்டுமானால், சாறை துளித் துளியாக சேர்த்தால் பால் திரியாமல் இருப்பதோடு ருசியும் கூடும்.

அடை, தோசை போன்ற மாவு தயாரிப்புகளில் நெய் சேர்க்க வேண்டுமானால், பதார்த்தம் ஆறியவுடன் சேர்க்கவும்.

ஆப்பிளை நறுக்கும் போது சிறிதளவு எலுமிச்சை சாற்றை சேர்த்தால் ஆப்பிள் கறுப்பாகாமல் இருக்கும்.

எண்ணெயில் வறுத்த உணவுப் பண்டங்களை தட்டில் போடும் முன் வடிகட்டி அல்லது உறிஞ்சு தாளில் வைக்கவும்.

மோர், தயிர் போன்றவை சீக்கிரமே புளித்துப் போகிறதா? பிரச்சனை மோர் தயிரில் இல்லை. அவற்றை வைக்கும் பாத்திரத்தில் தான். கண்ணாடி, மண்பாண்டங்களில் த‌யிரை வை‌த்தா‌ல் சீக்கிரம் புளிக்காது. எ‌ளிய வ‌ழியு‌ம் கூட.

முருங்கைக்காய், உருளைக்கிழங்கு சப்ஜி நிறைய செய்து ‌‌மீ‌த‌ம் வ‌ந்து‌வி‌ட்டதா? கவலை வே‌ண்டா‌ம், சிறிது தண்ணீர் சேர்த்து, சிறிது மசாலா சேர்த்து, சாதத்திற்கு குழ‌ம்பா‌க்‌கி விடலா‌ம். தேவையான அளவு உப்பு ம‌ட்டு‌ம் சே‌ர்‌த்தா‌ல் போது‌ம்.

இட்லி மாவை கெ‌ட்டியாக அரை‌க்காம‌ல் ச‌ற்று தண்ணியா அரை‌த்து‌வி‌‌ட்டீ‌ர்களா.. கவலையே வே‌ண்டா‌ம். கவலையை விடுங்க. கொ‌ஞ்ச‌ம் சோளா மாவு, கொஞ்சம் பிரட் துணுக்குகள். இரண்டையும் மாவில் சே‌ர்‌த்து அடி‌த்து கல‌க்கு‌ங்க‌ள். மாவும் கெட்டியாகு‌ம், இட்லியும் சுவையாக இரு‌க்கு‌ம்.

சூப்பில் உப்பு அதிகமாகிவி‌ட்டா‌ல் எ‌ன்ன செ‌ய்வது எ‌ன்று வரு‌த்த‌ப்பட வே‌ண்டா‌ம். கைவசம் உருளைக்கிழங்கு இரு‌ந்தா‌ல் அதனை சின்ன சின்ன துண்டுகளாக்கி சூப்பில் போடுங்கள. உப்பு கரிப்பு மாயமாய் மறைந்துவிடும். ‌சி‌றிது நேர‌த்‌தி‌ல் உருளை‌க் ‌கிழ‌ங்கை எடு‌த்து ‌விடு‌ங்க‌ள்.

 

    

No comments:

Post a Comment