'' 'அரவான்’ - அதிகம் உழைப்பைக் கொடுத்து நடித்த படம். உடல்மொழி, உரையாடல், பழங்கால மனிதர்களின் வாழ்க்கை என்று ஒவ்வொரு காட்சியும் ஒவ்வோர் அனுபவம். வெளி நாட்டுப் படங்களோ, மற்ற முன்மாதிரி களோ எதுவுமே இல்லை. எல்லாமே யோசிச்சு யோசிச்சுச் செய்யணும். வசந்தபாலனின் உழைப்புதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம். காடுகள், மலைகள், பாறைகள்னு எங்கெங்கோ எங்களை அழைத்துப் போய்க்கொண்டே இருக்கார்! வசந்தபாலனோட உழைப்புக்கும் ஈடுபாட்டுக்கும் ஓர் உதாரணம் சொல்றேன். ஒரு சந்தையில் கூழ் குடிக்கிற காட்சி. 'தொட்டுக்க கருவாடு இருந்தால் நல்லா இருக்குமே’னு அவரிடம் கேட்டேன். 'அது பஞ்ச காலம். நீர்நிலைகள் வத்திப்போயிருக்கும். அந்தக் காலத்தில் அணைகளும் கிடையாது. அதனால், மீனுக்கு வழி இல்லை’னு உடனே சொன்னார். ஆச்சர்யமான மனிதர்!'' - வியப்பு தெரிகிறது பசுபதியின் பேச்சில். அவரின் இயல்பான நடிப்புக்கு இங்கே போட்டி அதிகம் இல்லை என்பது தெரிந்ததுதான். பறவைகளின் இரைச்சல்களுக்கு மத்தியில் பசுபதி யிடம் பேசியபோது...
''அடுத்து விக்ரமோட 'கரிகாலன்’. தொடர்ச்சியா வரலாற்றுப் படங்களில் நடிக்கிறீங்களே?''
''என்னவோ தெரியலை... அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்குது. சோழர் காலத் தில் இருந்து ஒரு சுவாரஸ்யமான பகுதியை எடுத்து, அருமையா செய்திருக்காங்க. தமிழ் சினிமாவில் நல்ல மாற்றங்கள் நடந் துட்டே இருக்கு. புதிய புதிய விஷயங்களை ரசிகர்களுக்குக் கொடுக்கணும்னு புதுசா சினிமாவுக்கு வர்றவங்களுக்குத் தோணுது. பீரியட் படம் எடுப்பதற்கு வசதியா, இப்போ தொழில்நுட்பம் வளர்ந்திருக்கு. நடிப்பு மேல் தீவிரமான ஈடுபாடுகொண்ட எங்களை மாதிரியானவர்களுக்கு இது பொற்காலம்!''
''ஏன், நடிப்பில் இவ்வளவு இடைவெளி?''
''நானே தேர்ந்தெடுத்ததுதான் இந்த இடைவெளி. இரண்டு விஷயங்கள் இருக்கு. ஒண்ணு, சும்மா இருக்காமல் அடுத்தடுத்து படம் நடிச்சுட்டே இருக் கணும். இல்லைன்னா, பிடிச்சதை மட்டும் தேர்ந்தெடுத்துப் பண்ணணும். நான் இரண்டாவதைத் தேர்ந்தெடுத்தேன். எனக்குப் பிடிக்கலைன்னா, நடிக்க மாட்டேன். நடிகன்னா, தினமும் நடிச்சுக்கிட்டு இருக்கிறதுன்னு அர்த்தம் இல்லை. இப்பக்கூட 'வைரம்’னு ஒரு மலையாளப் படத்தில் நடிச்சேன். சிறந்த நடிகர்னு கிரிட்டிக் அவார்டு கிடைச்சது. எதுவும் பிடிச்சாதான் செய்றதுன்னு வழக்கம்ஆயிடுச்சு.
இப்பக்கூடப் பாருங்க, சிட்டியில் பறவைகள் சத்தமே கேட்க முடியலைனு கிழக்குக் கடற்கரைச் சாலை பக்கம் வந்துட்டேன். தினமும் காலையில் குயில்கள்தான் என்னை எழுப்புது. நல்ல படம்னா நடிப்போம்ணே!''
''ஹீரோவாவே நடிக்கணும்னு இருந்துட்டீங்களா?''
'' ஹீரோவா மட்டுமே நான் நடிப்பேன்னு சொன்னதே இல்லை. ஒரு அட்டகாசமான வில்லனா நடிக்கணும்னா, அதற்குரிய களம் கிடைக்கணும். இப்ப 'ஆரண்ய காண்டம்’ பார்த்தேன். ஜாக்கி ஷெராப் செய்திருந்த ரோலைச் செய்ய ரொம்ப ஆசையா இருந்தது. நன்கு வடிவமைக்கப்பட்ட கேரக்டர் ஜாக்கியுடையது!''
''ஏன், இதுவரை நீங்கள் திருமணமே செய்துகொள்ளவில்லை?''
''யார் சொன்னது? இரண்டு வருடங்களுக்கு முன்பே எனக்குத் திருமணம் நடந்துவிட்டது. திருமணம் மிகவும் பெர்சனலான விஷயம். அதை வெளியில் பகிர்வதற்கு எதுவும் இல்லை என்பது என் கருத்து. அவங்க பெயர் சூர்யா. ஆர்க்கிடெக்ட்!''
''நீங்க பெரிய அளவில் விவசாயம் பண்றதா சொல்றாங்களே?''
''சின்ன அளவுதாங்க. இயற்கை விவசாயம் பண்றேன். வேங்கை, வில்வம், வேம்பு, மகோகனி, மலைவேம்புனு ஏகப்பட்ட மரங்கள் வளர்க்கிறேன். இவ்வளவு நேர்த்திக்கும் 'பசுமை விகடன்’தான் எனக்கு உதவி.
ஆரோக்கியமான உணவு, காய்கறிகள், பெட்ரோல் வாசனைஇல்லாத காற்றுனு அற்புதமா இருக்கு வாழ்க்கை!''

No comments:
Post a Comment